Happy Birthday, Thalaivaa :) @arrahman :)

பின்வரும் பதிவானது சிற்சில இடங்களில், ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களுக்கு மட்டுமே புரியக்கூடியதாக இருக்க அநேக வாய்ப்புகள் உண்டு… ரஹ்மானின் ரசிகனாக, வெறியனாக என் அடிமனதில் இருந்து உண்மையாக, நிரம்பி வழியும் அன்போடு எழுதியது ஒவ்வொரு வார்த்தையும்…. Love you தலைவா… ஏ.ஆர்.ரகுமான் _/\_

இன்று ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் 49வது பிறந்தநாள்…

#ஏ_ஆர்_ரகுமான் என்கிற இந்த மனிதர் எனக்கும், என் போன்ற இளைஞர்களின் வாழ்விலும் மிக மிக முக்கியமானவர்…. என் வாழ்வின் ஒரு அங்கம் போலவே ஆனவர்… இவரது பாடல்களைக் கேட்காமல் ஒரு நாள் கூட கழிந்ததில்லை!
ஒரு சின்ன டவுனில் பிறந்து வளர்ந்த என் போன்ற ஒருவனுக்கு இசையை அறிமுகப்படுத்தியவர்… என்னைப் போல கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு 1990களில் western இசையை அறிமுகப்படுத்தியவர். அவரது ‘என்னவளே அடி என்னவளே’ தான் எங்கள் தலைமுறை ரசித்த முதல் மெலடி சாங்க்.. ‘ஹம்மா.. ஹம்மா..’, ‘முக்காலா முக்காபுலா’ எல்லாம் என்னவென்றே புரியாமலே டீக்கடை முதல் கல்யாண வீடு வரை ஹிட் அடித்த மேற்கத்திய இசை… அவரது ‘பேட்டை ராப்’பும், ‘கொக்கு சைவ கொக்கு’ம் தான் எங்கள் பள்ளிக்கால குத்துப்பாடல்கள்.. சூப்பர் ஸ்டாரை எங்கள் தலைமுறை தரிசித்ததும் ‘ஒருவன் ஒருவன் முதலாளி’, ‘என் பேரு படையப்பா’ போன்ற intro songகளில் தான்…
மிகைப்படுத்தி எல்லாம் சொல்லவில்லை… நானெல்லாம் #வைரமுத்து போன்ற எழுத்தரசர்களின் வரிகளைக் காதலிக்க ஆரம்பித்தது ரகுமானின் பாடல்கள் வழியே தான்.. அப்பப்பா, என்ன ஒரு கூட்டணி…! ‘புது வெள்ளை மழை’, ‘சின்ன சின்ன ஆசை’யில் தொடங்கி ‘என் மேல் விழுந்த மழைத்துளியே’, ‘மலர்களே மலர்களே’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே’, ‘கண்ணாளனே’, ‘எனக்கே எனக்கா’, ‘என்ன சொல்லப் போகிறாய்’, ‘எங்கே எனது கவிதை’, ‘வெண்ணிலவே வெண்ணிலவே’, ‘அஞ்சலி அஞ்சலி’, ‘யாக்கைத் திரி’, ‘விடை கொடு எங்கள் நாடே’, ‘ஒரு தெய்வம் தந்த பூவே’, ‘சினேகிதனே’ என்கிற இந்த வெற்றிக் கூட்டணி இன்று ‘ஓ காதல் கண்மணி’யின் ‘பறந்து செல்ல வா’, ‘நானே வருகிறேன்’, ‘தீரா உலா’, ‘மலர்கள் கேட்டேன்’ வரை தொடர்கிறது.

Taal, Rangeela போன்ற படங்கள் மூலம் எங்களை எல்லாம் இந்தி படங்கள் கேட்க வைத்த பெருமையும் தலைவன் ஏ.ஆர்.ரகுமானையே சேரும்!

மிக நன்றாக ஞாபகம் இருக்கிறது… ஆறேழு வயதிலேயே மனதில் ஆழமாய் பதிந்து போன ஒரு விஷயம் .. “ஏ.ஆர்.ரகுமான்’னு ஒரு மியூசிக் டைரக்டர்.. அவர் பாட்டெல்லாம் நல்லாருக்கும்” என்பது…! அந்த காலக்கட்டத்தில் காதலன், ரோஜா, பாம்பே ஆகிய படங்களின் பாடல்களே எங்கெங்கும்… அதிலும் ரஜினி நடிப்பில் முத்து பாடல்களும், கமல் நடிப்பில் இந்தியன் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆன பின் எட்டுத்திக்கும் ரஹ்மான் புகழ் தான்! ஆடியோ கேஸட் தேயாத குறையாக மிஸ்டர்.ரோமியோ, என் சுவாசக் காற்றே, ரட்சகன், ஜீன்ஸ், லவ் பர்ட்ஸ், காதல் தேசம் போன்ற படங்களின் பாடல்களைக் கேட்டதுண்டு. சங்கமம், ரிதம் மற்றும் படையப்பா படத்தின் ஆடியோ கேசட் விற்பனை எல்லாம் இன்னும் பல ஆண்டுகளுக்கு வரலாறு பேசும்! படையப்பா மற்றும் காதலர் தினம் ஆடியோ சேசட் எல்லாம் முன்பதிவு செய்தும் கிடைக்காமல் போன கதை எல்லாம் உண்டு (இந்த காலத்தில் தான் online piracy, ஒரே நிமிடத்தில் download எல்லாம்… 1990களில் ஒரு பெரிய படத்தின் ஆடியோ கேசட்டை முதல் நாளில் வாங்குவதே சாதனை தான்!) ரஜினி’யின் பாபா திரைப்படம் வரை தொடர்ந்த ஆடியோ கேசட் காதல், அதன் பின் ஆடியோ சி‌டி என பரிணாம வளர்ச்சியடைந்தது.

நடுவில் சில ஆண்டுகள் ஹிந்தியில் அதீத கவனம் செலுத்திய ரகுமான், அங்கேயும் வெற்றிக்கொடி நாட்டினார். மிகப்பெரும் ஜாம்பவாங்களான தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இந்த அருமைத் தமிழனுக்காகக் காத்திருந்தனர்! ஒரு கட்டத்தில் எக்கச்சக்க பாலிவுட் வாய்ப்புகள் வந்து குவிய, ‘எவ்வளவு பிசியாக இருந்தாலும் சரி, என் தாய் மொழி தமிழில்  வருடத்திற்கு இரண்டு படங்களாவது இசையமைப்பேன்’ என முடிவோடு இருந்தார். ரஹ்மானது புகழ் மேற்கத்திய நாடுகளுக்கும் பரவ, விரைவில் Hollywood பட வாய்ப்புகளும் அவரது கதவைத் தட்டியது.

ஒரு கால கட்டத்தில், ரஹ்மான் அவர்களின் பாடல்கள் மீதான காதல், ஒரு வகை போதையாக, வெறியாக.. விவரிக்க முடியாத பைத்தியக்காரத்தனமாகவே மாறிப்போனது. ரஹ்மானின் இசை என்பதைத் தாண்டி, ரஹ்மான் அவரே பாடிய பாடல்கள் மீது தனி கிறக்கம் பிறந்தது.
நான் UG படித்துக்கொண்டிருந்த பொழுது ‘நியூயார்க் நகரம்’, ‘தீயில் விழுந்த தேனா’, ‘எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே’, ‘அதிரடிக்காரன்’, ‘Roobaroo’, ‘Khalbali’ போன்ற ரஹ்மான் பாடிய பாடல்களே தினமும் சுப்ரபாதம்!

2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் SLUM DOG MILLIONAIRE படத்திற்காக OSCAR விருதிற்காக பரிந்துரைக்கப் பட்டிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான் (ஏற்கனவே, Golden Globe வென்றிருந்தார்)… திங்கள்கிழமை காலை 6:30 மணி முதல் 11 மணி வரை அந்த நிகழ்ச்சி LIVE ஆக ஒளிபரப்பாகும். காலேஜ் லீவு போட்டு வீட்டில் பார்க்க முடியாதென்பதால், காலேஜ் கட் அடித்துவிட்டு ஒரு டீக்கடையில் அந்த கடை ஒனரிடம் கெஞ்சிக் கூத்தாடி எப்பொழுதும் SUN MUSIC’ம் ஆதித்யா காமெடி சேனளலும் ஓடுகிற அந்த டி‌வியில் STAR MOVIES ஓட வைத்து, ரஹ்மான் ஆஸ்கார் வாங்கிவிட்டு தமிழில் பேசுவதை எல்லாம் அந்த டீக்கடைவாசிகளோடு பார்த்தது எல்லாம் அடிப்பொளி  அனுபவம்!!

ரஹ்மான் அவர்களின் இசையைப் பெரிதும் விரும்பாத சிலர் கூறும் சம்பிரதாய குற்றச்சாட்டு “ரஹ்மான் முன்ன மாதிரி இப்போ இல்லை.. நல்லாவே பாட்டு போட மாட்டேன்ங்கிறாரு” என்று.. அவர்களுக்கு எல்லாம் தெரியாது 95% ஹிட் ரெகார்ட் உள்ள ஒரே இசையமைப்பாளர் ரஹ்மான் தான் என்பது. அவரது careerஇல் flop ஆல்பம் என்றால் அது பரசுராம் போல ஒரு சில ஆல்பம் மட்டுமே. சுமாரான பாடல்கள் அல்லது அவரது தரத்தினும் சற்றே குறைந்த பாடல்கள் கொண்ட ஸ்டார், லிங்கா, கண்களால் கைது செய் போன்றவை கூட ஹிட் ஆல்பங்களே! அவரைப் பற்றி இப்படி கூறுபவர்கள் எல்லாம் கடல், மரியான், விண்ணைத்தாண்டி வருவாயா, ராவணன், ஆயுத எழுத்து, எந்திரன், சில்லுனு ஒரு காதல், கோச்சடையான், ஓ காதல் கண்மணி போன்ற படங்களின் அருமையான பாடல்களைக் கேட்கத் தவறிவிட்டார்களோ என்னவோ?!

தமிழ், இந்தி, ஹாலிவுட் என மென்மேலும் வளரும் ஏ.ஆர்.ரஹ்மானது வளர்ச்சி ஒவ்வொரு நாளும் வியக்க வைக்கிறது (கனடாவில் அவரது பெயரில் ஒரு தெருவே உண்டு!! இந்த லிங்கில் பார்க்கவும் –> http://www.goo.gl/ZRLhZk) உலகமெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தும், கிட்டத்தட்ட இசைக்குரிய விருதுகளில் மிக முக்கியமானவற்றை வென்றுவிட்ட பிறகும் அவரது தன்னிலை மாறா குணமும், தன்னடக்கமுமே அவரது சொத்தாக இருக்கிறது. ‘Beep Song’ சர்ச்சையில் சிக்கித் தவிக்கும் சிம்புவிற்கு moral support அளிக்கும் வகையில், மற்ற வேலைகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு உடனடியாக அவர் compose செய்து தந்த ‘தள்ளிப் போகாதே’ பாடல்… அந்த உதவி ஒரு சமீபத்திய உதாரணம், அவர் எவ்வளவு பெரிய மனதுக்காரர் என்பதைச் சொல்ல!

2007இல் ஒரு பேட்டியில் மிக உருக்கமாய் சொன்னார் ‘என் தமிழ் மொழியும், தமிழ் மக்களும் எனக்காக எவ்வளவோ செய்திருக்கின்றனர். ஆனால், நான் எதுவுமே கைமாறாக செய்துவிடவில்லை. எனக்கு இரண்டு ஆசைகள் உண்டு. ஒன்று, சென்னையில் ஒரு இசைப் பள்ளி தொடங்கி மானவர்களுக்கு நியாயமான கட்டணத்தில் தரமான இசை பயிற்சி அளிக்கவேண்டும். இன்னொன்று, உலகப் பொதுமறையான திருக்குறளின் 1330 குறளையும் அனைவரும் எளிதில் படிக்கும் வகையில் இசையமையத்து உலகமெங்கும் புகழ் சேர்க்க வேண்டும்.. அது மிகப்பெரிய சவால், ஏற்கனவே வேலைகள் ஆரம்பித்து விட்டேன். இன்னும் 3, 4 ஆண்டுகள் ஆகும்’ என்றார். அவரது முதல் கனவு நிறைவேறிவிட்டது, இரண்டாவது கனவு சில காரணங்களால் நின்று போனது. அந்த கனவும் விரைவில் நிறைவேற வேண்டுமென வாழ்த்துவோம்.

சென்னை வந்து 5 ஆண்டுகளாகப் போகிறது. இத்தனை ஆண்டுகளில் நான் நேரில் சந்தித்து பேச விரும்பும் ஒரே சினிமா celebrity ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் மட்டுமே. இதுவரை பொது விழாக்களில் அவரை 3 மூன்று முறை பார்த்திருக்கிறேன், மிக விரைவில் அவரை தனிப்பட்ட முறையில் சந்திப்பேன் என நம்புகிறேன்! வருகிற ஜனவரி 16ஆம் தேதி நடக்கவிருக்கும் அவரது ‘நெஞ்சே எழு’ LIVE CONCERTஐ நேரில் காண மிக ஆவலோடு காத்திருக்கிறேன்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், ARR…!! நீங்கள் இன்னும் பற்பல ஆண்டுகள் நோய் நொடியின்றி வாழ உளமாற வேண்டி வாழ்த்துகிறோம்.
கலிலூர் ரஹ்மான்

 

Happy Birthday A.R.Rahman

There are high chances that the below article might be understandable only by A.R.Rahman fans (in few lines)… As a hard-core fan and admirer of A.R.Rahman, I have shared my love for him from the bottom of my heart… Love you, ARR _/\_

Today is the 49th Birthday of ‘Isai Puyal’ A.R.Rahman…

For me and in the lives of youngsters like me, #A_R_Rahman is a very important person… he is an integral part in our lives… there isn’t a single day spent without his songs!
He was the one who introduced music to people like me… he introduced ‘Western music’ to millions of audience like me in the 1990s. His ‘Ennavale, Ennavale’ was the first melody song for our generation. Songs like ‘Hummaa Hummaa’ and ‘Mukkaalaa Mukkaapulaa’ were viral hits from tea shops to marriage houses. His ‘Pettai Rap’ and ‘Kokku saiva Kokku’ were our school-time ‘Kuthu songs’… Our generation celebrated ‘Super Star’ on screen with his intro songs like ‘Oruvan Oruvan Mudhalaali’ and ‘En Peru Padayappaa’ only…

This is no exaggeration… but, I started loving Legendary writer Vairamuthu’s lines only through A.R.Rahman’s songs. Whatta fantasic combination it is!! It started with ‘Chinna chinna aasai’, ‘Puthu vellai mazhai’ and it went on with evergreen songs like ‘En mel vizhundha mazhaithuliye’, ‘Malargale Malargale’, ‘Thenmerku Paruvakaatru’, ‘Oru poiyyaavathu sol kannae’, ‘Kannaalane’, ‘Enakkae Enakkaa’, ‘Anjali Anjali’, ‘Vennilave Vennilave’, ‘Enna solla pogiraai’, ‘Engae enadhu kavidhai’, ‘Yaakkai Thiri’, ‘Vidai kodu engal naadey’, ‘Oru deivam thandha poovey’, ‘Snehithane’ and is remaining fresh and young till date with the recent songs of ‘O Kadhal Kanmani’ – ‘Parandhu sella vaa’, ‘Naaney varugiren’, ‘Theeraa Ulaa’, ‘Malargal Ketten’.

He is the sole reason for people like us to listen to Hindi songs by his initial films in Hindi – TAAL and RANGEELA!

I very well remember that, at the age of 6 or 7 itself, I had something registered in my mind… “there is this composer called A.R.Rahman.. he gives very interesting songs.” Songs of Kaadhalan, Bombay and Roja were so popular at that time. That too, after the release of Rajini’s MUTHU and Kamal’s INDIAN, Rahman’s name & fame reached every nook and corner! We use to listen to the songs of Mr.Romeo, En Swaasa Kaatre, Ratchagan, Jeans, Love Birds and Kaadhal Desam in audio cassettes continuously with no break at all. The audio sales of Rhythm, Sangamam and Padayappaa were historically record-breaking! In few areas, the audio cassettes of Padayappaa and Kaadhalar Dhinam were not available for people who even made advance bookings (online piracy and downloads in few seconds are possible today only… in 1990s and early 2000s, buying a big film’s audio cassette the first day itself is an achievement!) The love for audio cassette that continued till Rajini’s BABA, was then replaced by Audio CDs.

For few years, A.R.Rahman was concentrating so keenly in Bollywood films and made his signature success stamp so strongly there too. Many leading producers and directors were waiting for this successful Tamil youngster! Over a point of time, when he was flooded with Bollywood offers, he made a very firm decision that “Whatever busy I may be, wherever I may go… I will do at least 2 films in Tamil every year” Eventually, his works reached the west and Hollywood offers knocked his door.

In a certain period of time, my love for A.R.Rahman’s songs grown into an addiction and an indescribable craze!! Other than the songs composed by A.R.Rahman, there was a magical addiction to his voice. Songs sung by him such as ‘Newyork Nagaram’, ‘Theeyil vizhundha thaenaa’, ‘Ellaa pugazhum oruvanukkey’, ‘Athiradikaaran’, ‘Roobaroo’ and ‘Khalbali’ become my prayer in college days.
In February 2009, A.R.Rahman was nominated for the prestigious Academy award for his work in SLUM DOG MILLIONAIRE (he had already won GOLDEN GLOBE award for the same, few weeks back). That program was going LIVE from Monday morning 6:30AM to 11AM. I was not able to take leave from college and watch it at home. So, I bunked my class and went to a nearby Tea stall. I requested the Tea stall owner to play STAR MOVIES channel in the tv in his shop (where you can see SUN MUSIC and AADHITHYA only running 24X7). Cannot forget that day when the whole tea shop was whistling and enjoying it like a cricket match, where A.R.Rahman was speaking in Tamil after receiving the 2 OSCAR awards!!

There is a namesake complaint on A.R.Rahman from few people who does not like his music much, that “A.R.Rahman’s songs are not as good as it used to be earlier”. Those people would not know the fact that A.R.Rahman is the only music director with a hit rate of 95% in the industry! He has only very few flop albums in his career such as Parasuram. Even films that have average songs or songs that are below his actual standard like Star, Lingaa, Kangalaal Kaidhu sei are also hit only. People who make such comments might have not listened to his fantastic albums like Kadal, Mariyaan, Vinnaithaandi Varuvaayaa, Raavanan, Aayudha Ezhuthu, Endhiran, Sillunu Oru Kaadhal, Kochchadaiiyaan and O Kadhal Kanmani it seems!

The evolution and growth of A.R.Rahman as a Global Rockstar from Kollywood to Bollywood to Hollywood is just amazing! His growth everyday is just adorable!! (There is even a street in his name in Canada now! See the link –> http://www.goo.gl/ZRLhZk) Even after gaining billions of fans all over the world and winning most of the significant awards for his music, his character and humbleness remains the same. His efforts putting away all other works and composing ‘Thalli Pogaathey’ song in a single day to give a moral support for Simbhu… that is one example to refer how great and selfless he is!

In 2007, he said in an interview emotionally that, “Tamil language and people have given a lot for me… but, I have not done much in return. I have two wishes. First one, is to build a music school in Chennai and to provide students quality music education in a reasonable price. Second one is to compose all 1330 Kurals in Thirukkural in a simpler way for people to remember and recite, taking it to the next generation and all over the world. That is a herculent task and it will take minimum of 3 to 4 years. I have started the works already’. He made his first dream come true. But, the second wish was halted due to unknown reasons; we wish that dream also to come true very soon.

It is been 5 years since I came to Chennai. The only cinema celebrity whom I would like to meet in person is none other than A.R.Rahman. I have seen him thrice in public functions. I wish that I will see him in person very soon! very much excited to watch and enjoy his ‘NENJE YEZHU’ Live concert on January 16th!

Birthday wishes, A.R.Rahman sir…!! We wish you livelong happily with all success and prosperity!
– Kalilur Rahman

Advertisements

2 thoughts on “Happy Birthday, Thalaivaa :) @arrahman :)”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s