கமர்ஷியல் சினிமாவும் சுந்தர்.C’க்களும், ராகவா லாரன்ஸ்’களும்!

கமர்ஷியல் சினிமாவும் சுந்தர்.C’க்களும், ராகவா லாரன்ஸ்களும்!

(முன் குறிப்பு – இந்த பதிவினை எழுதியதன் முக்கியக் காரணம் சுந்தர்.C மீதோ, ராகவா லாரன்ஸ் மீதோ எனக்கு எந்த கோபமோ, வெறுப்போ இல்லை. சுந்தர்.C’யின் உள்ளத்தை அள்ளித்தா‘, ‘கலகலப்பு‘, ‘மேட்டுக்குடி‘, முறைமாமன் போன்ற படங்களை எண்ணற்ற முறை பார்த்து ரசித்திருக்கிறேன்; லாரன்ஸ் இயக்கத்தில் முனி-2′ திரைப்படமும் எனக்கு பிடித்த படங்களில் ஒன்று. ஆனால், அவர்கள் தொடர்ந்து சில மெத்தனப் போக்கான படங்கள் மட்டுமே கொடுத்து ரசிகர்களின் ரசனையை மழுங்கடிக்க செய்வதன் மீதான பெரும் வருத்தம் தான் இந்த பதிவினை எழுத உந்தியது!!)

கமர்ஷியல் சினிமா எடுக்கும் இயக்குனர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்:
முதல் வகை தங்கள் கதைக்கு மட்டுமே நேர்மையாக இருந்து, முடிந்த வரை லாஜிக் குறைகளும் கிளிச்சேக்களும் இல்லாமல் கவனித்து நல்ல கமர்ஷியல் எண்டர்டைனர் தரும் இயக்குனர்கள் (உதாரணம் – காக்க காக்க, தனி ஒருவன், சதுரங்க வேட்டை, விஸ்வரூபம், இறுதிச்சுற்று…! கதைக்கு தேவையில்லாத சில மசாலா ஐட்டங்கள் இருந்தாலும் முதல்வன், அந்நியன், துப்பாக்கி, கத்தி, மங்காத்தா போன்ற larger than life படங்களும் இந்த வகையில் சேரும்)

இரண்டாம் வகை லாஜிக் எல்லாம் பெரிதாக பார்க்காமல், கொஞ்சம் மசாலா தூவி பழகிப்போன கதைகளையே ரசிக்கும்படி கொடுக்கும் இயக்குனர்கள் (உதாரணம் – சிவாஜி, சிங்கம், வேலையில்லா பட்டதாரி போல பல தடவை நாம் பார்த்து ரசிக்கும் படங்கள். வீரம், திருப்பாச்சி போன்ற திரைப்படங்களையும் கூட இந்த வகையில் சேர்க்கலாம்)

மூன்றாம் வகை கதை, லாஜிக், கன்றாவி எல்லாம் தூக்கித் தூரமா போடு… ஏதாச்சும் பண்ணி, ரசிகர்களை 2 மணி நேரம் போரடிக்காம பார்த்துக்கணும் என்ற முடிவோடு படமெடுக்கும் இயக்குனர்கள் இவர்கள். இவர்கள் படங்களில் திகட்ட திகட்ட glamour’ம், பார்த்துப் பழகிப் போன humour’ம் கண்டிப்பாக இருக்கும். பழைய தமிழ் படங்கள், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என பலதரப்பட்ட படங்களிலிருந்து காட்சிகளும், வசனங்களும் பாரபட்சமின்றி உருவப்பட்டிருக்கும். அதனாலென்ன இப்போ, case போடுவீங்களா போட்டுக்கோங்க என்கிற ரீதியில் இருக்கும் இந்த  இயக்குனரின் ரியாக்சன். (உதாரணம் – வேதாளம், வில்லு, குருவி, கிரி, முனி பார்ட் 3, அரண்மனை பார்ட் 1 மற்றும் 2)

இந்த மூன்று வகைகளைத் தவிரவும், சில தெய்வ மகான் இயக்குனர்கள் உள்ளனர்… அவர்கள் எல்லாம், அதுக்கும் மேல! (உதாரணம் – சுராஜ், சக்தி சிதம்பரம்)

சரி, கதைக்கு வருவோம்.. தென்னிந்திய சினிமாவைப் பொறுத்த வரை மேலே கூறப்பட்டுள்ள முதல் இரண்டு வகை இயக்குனர்களை விட மிக அதிகமாக காணப்படுவோர் மூன்றாம் வகை இயக்குனர்களே (மலையாள சினிமாவை விதிவிலக்காக வைத்துக்கொள்ளலாம்). ஏற்கனவே சொன்னது போல, இந்த வகை இயக்குனர்கள் கதை மற்றும் தொழில்நுட்ப விஷயங்களைக் காட்டிலும், ‘Gimmicks’ என சொல்லப்படும் கதைக்கு தேவையில்லாத மற்ற விஷயங்களிலேயே அதிக கவனம் செலுத்துவர். (உதாரணம் – அது சந்தானம் அல்லது சூரியின் காமெடி ட்ராக்காக இருக்கலாம், சன்னி லியோன் அல்லது முமைத் கானின் ஐட்டம் டான்ஸ் ஆக இருக்கலாம், பிரபல நடிகர், நடிகையின் கௌரவத் தோற்றமாக இருக்கலாம்.. அல்லது அரண்மனை 2படத்தில் வருவது போல, கதைக்கு அவசியமே இல்லாவிட்டாலும் 2, 3 நடிகைகளை (கவர்ச்சியாக) நடிக்க வைப்பதைக் கூட சொல்லலாம்) இந்த விஷயங்கள் தான் ‘Majority audience’ ஆன பாமர ரசிகனை மிக எளிதாக தியேட்டருக்கு இழுத்து வரக்கூடியவை. இதிலெல்லாம் ஒரு இயக்குனர் அதிக கவனம் செலுத்துவதற்கு ஒரேயொரு காரணம் – தன் கதையின் மேல் அதிக நம்பிக்கை இல்லாததும், படத்தை வாங்க நினைக்கும் விநியோகிஸ்தர்களுக்கு ‘Minimum Guarantee’ என ஏதோ ஒன்றை காட்டுவதற்கும் தான்!

இந்த பதிவின் தலைப்பில் தேவையில்லாமல் ‘சுந்தர்.C’ மற்றும் ‘ராகவா லாரன்ஸ்’ ஆகியோரது பெயரை இழுத்தது ஏன் என நீங்கள் யோசிக்கலாம், காரணம் உண்டு! இன்றைய ட்ரெண்டில் ‘Horror Comedy’ என்கிற பெயரில் என்ன படம் எடுத்தாலும் திரையரங்கிற்கு மக்கள் வருகின்றனர்; பிரபல இயக்குனர் அல்லது பிரபல நடிகர் என்றால் சொல்லவே வேண்டாம். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘முனி பாகம் 1’ சுமாராக இருந்தது, ‘முனி பாகம் 2’ அதைப் போலவே இருந்தாலும் கூட நன்றாகவே இருந்தது, ‘முனி பாகம் 3’ படு சுமாராக இருந்தது :/ இரண்டாம் பாதியோ சகிக்க முடியாத அளவு அரதப்பழசாக இருந்தது! சுந்தர்.C’யின் கதை வேறு… எல்லோரும் ‘horror comedy’ படம் எடுக்கிறார்கள் என்று தன் பங்குக்கு தானும் ‘அரண்மனை’ படத்தை எடுத்தார்; ‘ஆயிரம் ஜென்மங்கள்’ மற்றும் ‘சந்திரமுகி’ கதையை அப்படியே உல்டா பண்ணி, பழைய தமிழ் படங்கள், ‘1408’ மற்றும் ‘Mirrors’ போன்ற ஹாலிவுட் படங்களில் இருந்தெல்லாம் காட்சிகளை உருவி படம் எடுத்தாலும் கூட சந்தானம் காமெடி, ஆண்ட்ரியா மற்றும் ராய் லக்ஷ்மி கிளாமர் தயவில் அந்த படம் வெற்றிபெற்றது. அந்த படம் கொடுத்த தைரியத்தில் ‘அரண்மனை 2’ என்கிற பெயரில் அச்சுப் பிசகாமல் அதே படத்தை எடுத்து வைத்திருக்கிறார் சுந்தர்.C. அந்த படத்துக்கும் இவ்வளவு பெரிய ஓபனிங்க் கிடைத்திருப்பது தான் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் 😦

விஷயம் என்னவென்றால், இன்னும் இதே போல் 4, 5 பாகம் எடுத்தால் கூட மக்கள் இவர்களை நம்பி தியேட்டருக்கு வருவர்; அவர்களுக்கு பொழுதுபோக்கு முக்கியம். ஆனால், ‘முனி-4’ அல்லது ‘அரண்மனை-3’ படத்திலாவது இந்த இயக்குனர்கள் ஏதாவது புதிதாக யோசிப்பார்களா? நிச்சயம் யோசிக்க மாட்டார்கள், அந்த படங்கள் இப்படி வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கும் வரை!

சுந்தர்.C அல்லது ராகவா லாரன்ஸ் அவர்கள் இயக்கிய திரைப்படப் பட்டியலைப் பார்த்தால் தெரியும், அவர்கள் கொடுத்த வெற்றிப்படங்களை விட தோல்விப்படங்களின் எண்ணிக்கையே அதிகம் என்று. தங்கள் Survival’க்காக இவர்கள் எடுத்த படங்களே அதிகம் என்று சொன்னால் அது மிகையாகாது. அது தவறும் அல்ல, ஏனென்றால் சினிமாவின் முதன்மை நோக்கம் வியாபாரம் தான். ஆனால், அதன் பொருட்டு தொடர்ந்து ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்?

‘பீட்சா’, ‘டிமான்டி காலனி’, ‘மாயா’, ‘யாமிருக்க பயமேன்’ என புது இயக்குனர்களே இவ்வளவு வெரைட்டியாக horror படங்கள் எடுக்கும்போது, சீனியர் இயக்குனர்களால் முடியாதா என்ன? ‘நீ மாஸ் னா, நான் பக்கா மாஸ்’ என்று ‘மொக்க’ பஞ்ச் டயலாக் பேசும் பேய், சுந்தர்.C படத்தில் வருவது போன்ற கவர்ச்சி பேய் என தொடர்ந்து மெத்தனப் போக்கான படங்கள் மட்டுமே கொடுத்து  ரசனையை மழுங்கடிப்பது சரியா?  சுந்தர்.C, ராகவா லாரன்ஸ் போன்ற இயக்குனர்கள் யோசிப்பார்களா?!

சாப்பாடாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி ‘மசாலா’ என்பது வெறும் கூட்டுப்பொருள் மட்டும் தான்! அதையே, முழுக்க முழுக்க ஒரு டப்பாவில் அடைத்து சாப்பிட சொன்னால் முடியுமா?!

எழுதியவர்: ரஹ்மான்

கமர்ஷியல் சினிமாவும் சுந்தர்.C’க்களும், ராகவா லாரன்ஸ்’களும்!

Commercial Films & the Formula Filmmakers!

(Fore-note: The reason that I am writing this article is not that I have anything personal towards directors like Sundar.C or Raghava Lawrence. I have been a great fan of his films like Ullathai Allithaa, Kalakalappu, Mettukudi and few others. I have also enjoyed watching Muni-2 film equally. The reason to write this article is that it is worrying that filmmakers like them are making films with a very lethargic writing continuously, that blunts the cinema taste of our audience.)

Directors who make Commercial films are of three categories:

First Category:
People who are very honest to their scripts, trying to make a flawless film with no logical lags or clichés, aiming to deliver finest commercial entertainers (Example – Kaakha Kaakha, Thani Oruvan, Sathuranga Vettai, Vishwaroopam, Irudhi Suttru…! Films that have one or two commercial compromises with masala additions like Mudhalvan, Anniyan, Thuppaakki, Kaththi, Mankatha also falls under this category, though they may be ‘Larger than life’ scripts.)

Second Category:
Directors who deliver entertainers that does not mind much about logic, films that are mostly of ‘Old win in new bottle’ style with interesting masala additions (Example – Films that we watch and enjoy many times such as Singam, Sivaji, Velaiyillaa Pattadhaari. Films such as Veeram and Thiruppaachi can also be added in this list.)

Third Category:
Directors who make films with a predetermination of ’Logic, WTF? Throw away story, script and other stuffs… Do whatever, but give a film for the audience that is not boring for 2 hours’.  These films will definitely have routine ‘humour’ and unlimited & unnecessary ‘glamour’! There will be scenes inspired, referred, copied (u call it however you want) from old Tamil films and popular & unpopular Telugu, Hindi and Hollywood films. The director’s reaction will be like ‘So what? If you are going to file a plagiarism case, go ahead!’  (Example – Vedalam, Villu, Kuruvi, Giri, Muni Part 3, Aranmanai part 1 and 2)

There are few legendary directors who are out of these three categories too… they are all ‘Athukkum mela’! (Example – Directors Suraaj & Sakthi Chidambaram)

Coming to the subject again, from the 3 categories listed above, South Indian Cinema has more number of directors from third category only than the first two categories (Malayalam industry is an exception). As said earlier, these types of directors focus more on ‘Gimmicks’ (that are not necessary for the script) rather than the story or technical finesse. (Example – It might be a comedy track of Santhanam or Soori, an item song involving Sunny Leone or Mumaith Khan, the guest appearance of a popular actor / actress.. or Casting three (glamour) actresses which the script might not demand as in ‘Aranmanai 2’)

These ‘gimmicks’ attract an ordinary cinema goer easily (the majority audience). The primary reasons that a director relies much on such gimmicks is that he might be less confident on the script or to exhibit something as ‘Minimum Guarantee’ for his investors and distributors!

Some might wonder why I brought in the names of Sundar.C and Raghava Lawrence here in this article’s topic; there is a reason! As of today, people are easily pulled towards theatre by films whatever comes with a label of ‘Horror Comedy’ genre; if it is a film that has a popular director or an actor name, it is even more attractive. ‘Muni Part 1’ directed by Raghava Lawrence was an average yet enjoyable film, ‘Muni Part 2’ had almost the same story but it was even better and ‘Muni Part 3’ was very average (below average :/ )The second half of ‘Muni 3’ was intolerable, with unimpressive age-old scenes. Whereas, the story of Sundar.C is completely different. He made ‘Aranmanai’, just because everyone did a horror comedy film at that time; the film’s plot was heavily inspired from yesteryear films ‘Aayiram Jenmangal’ and ‘Chandramukhi’ and there were many scenes lifted from old Tamil films and Hollywood films such as ‘1408’ and ‘Mirrors’; the film became a hit relying so much on Santhanam’s comedy and Andrea & Raai Laxmi’s glamour portions. With the confidence that the film’s success gave, he made ‘Aranamanai 2’, which had the same story and almost the same set of scenes. The most worrying thing is that such a film has got a grand opening. 😦

The fact is that, even if part 4 or 5 is made in the same franchise, people will go to theatre; they need entertainment. However, will these directors think about adding any kind of novelty to the story or screenplay at-least in ‘Aranmanai 3’ or ‘Muni 4’? Definitely not! They will not do so, until any of these films flop miserably at the box office!

If you have a look at the filmography of Sundar.C or Raghava Lawrence, you will know that the number of flop movies that they gave is higher than their hit films. It is not an exaggeration saying that most of their films were just made for their survival in the industry, and nothing more. This is not a complaint, because the primary motive of films is business. But, is that justified by cheating the audience continuously with mediocre / mere entertainers alone?

In an era where debut directors are itself showing a lot of variety in the genre ‘horror’ with films such as ‘Pizza’, ‘Demonte Colony’, ‘Maya’ and ‘Yamirukka Bayamen’, can’t the seniors try anything new? Is that right to give films that ruins our audience’s tastes continuously? (Ghosts that speak pathetically laughable punch dialogues like ‘Nee Mass na, Naan Pakkaa Mass’ or Ghosts that try to seduce the viewers as shown in Sundar.C’s films) Will Sundar.C and Raghava Lawrence think about it?

Whether it is food or cinema, ‘Masala’ can be an ingredient only; it cannot be a food by itself! A tin filled with masala alone cannot be taken in to chow! 

Written by: Rahman

‘FOLLOW’ us at https://boxofficebossblog.wordpress.com to read more movie reviews & interesting cinema articles… Movie buffs, do subscribe..!!

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s