எதனால் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாகிறது ‘விசாரணை’?!

எதனால் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாகிறது ‘விசாரணை’?!

(Read the English version below)

#விசாரணை திரைப்படம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

**** படம் பார்த்தவர்கள் மட்டும் மேற்கொண்டு படிக்கவும் ****

சமீப காலத்தில் ‘விசாரணை’ போன்றதொரு மிரட்டலான திரைப்படத்தை நாம் யாரும் பார்த்திடவில்லை என்றே சொல்லலாம். இங்கே ‘மிரட்டல்’ என்கிற வார்த்தையை நான் பிரயோகித்திட காரணம், இந்த படத்தின் முதல் பாதியில் வரும் வன்முறைக் காட்சிகளால் அல்ல! நிச்சயமாக, இதை விட இன்னும் கொடுமையான வன்முறைக் காட்சிகளை தமிழ் சினிமாவிலேயே பார்த்திருக்கிறோம். ஆனால், நம் மனதை பெரிதும் உலுக்கியது படம் முழுக்க காட்டப்படும் பல உண்மைகள்; நாம் நம்ப விரும்பிடாத பல கசப்பான உண்மைகளை முகத்திலடித்தாற் போல் சொல்கிறது இத்திரைப்படம்!

படத்தின் முதல் பாதியில் பொது மக்களிடமும், அப்பாவி கீழ்த்தட்டு மக்களிடமும் காவல் துறை எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதைப் பற்றியும், தப்பே செய்யாதவர்களை இரக்கமே இல்லாமல் எப்படி பேயடி அடித்து குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கிறார்கள் என்பது பற்றியும்… இரண்டாம் பாதியில் காவல் துறைக்குள் இருக்கும் ஊழல், அரசியல்வாதிகளுடனான பேரங்கள் என கறைபடிந்த, கண்ணியமற்ற காவல் அதிகாரிகளின் மறுபக்கத்தையும் காட்டியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்!

கோவையை சேர்ந்த ஆட்டோ சந்திரன் என்பவர் 13 நாட்கள் சிறையில் தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி ‘லாக்கப்‘ என்கிற பெயரில் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது ‘விசாரணை’ திரைப்படம். 33 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தில், சமகாலத்தில் நடந்த பல உண்மை சம்பவங்களை நேர்த்தியாக புனைந்துள்ளார் வெற்றிமாறன்!

2011ஆம் ஆண்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய 1,76,645 கோடி ருபாய் ஊழல் 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் மிக முக்கியமான சாட்சியான சாதிக் பாட்சா அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கப்பட்டிருந்தார்; அது கொலையா, தற்கொலையா என கடைசி வரை தெளிவாக நிரூபணம் ஆகவில்லை! இந்த படத்தில் வரும் KK கதாபாத்திரத்தை அதனுடன் ஒப்பிடலாம். சாதிக் பாட்சா உயிரோடு இருந்திருந்தால், அவர் வாயை திறந்து உண்மைகளைப் பேசியிருந்தால் தமிழக அரசியலே (இந்திய அரசியலே!!) பெரும் புயலுக்கு உள்ளாகியிருக்கும் (இரண்டாம் பாதியில் வரும் ஒரு வசனத்தை கவனிக்கவும் – ‘எதிர்க்கட்சி போன ஆட்சியில ஒரு பெரிய டீல் sign பண்ணப்போ, இந்த KK தான் எல்லாம் பண்ணிக் குடுத்தான்’). இது போக, சில ஆண்டுகளுக்கு முன் பெரும் சர்ச்சைக்குள்ளான சென்னையில் நடந்த ஒரு பரபரப்பான என்கவுண்ட்டர் சம்பவத்தை நினைவுபடுத்தும் கிளைமாக்ஸ் காட்சி, செம்மரக்கடத்தல் விவாகரத்தை நினைவுப்படுத்தும் வகையிலான ஒரு வசனம் என பல விஷயங்களைக் குறிப்பிட்டு சொல்லலாம்.

படம் முழுக்கவே இன்னும் பல கேள்விகளை துணிவாக நம் முன் வைக்கிறார் இயக்குனர். பெரும்பாலும் அதிகார வர்க்கத்துக்காகவே வேலை செய்து, பொது மக்களை இம்சிக்கும் போலீஸின் பெரும்பான்மை குணத்தை கடுமையாக சாடுகிறார். இந்த System யாருக்கானது, உண்மையில் யாருக்காக வேலை செய்கிறது என உரக்கக் கேட்கிறார். இரண்டாம் பாதியில் பல இடங்களில் நம்பமுடியாத உண்மைகள், ‘ஜஸ்ட் லைக் தட்’ தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது! போலி என்கவுண்ட்டர்கள், தற்கொலையாக மாற்றப்படும் விசாரணைக் கொலைகள், போலி தடயவியல் அறிக்கைகள், தங்கள் வசதிக்கேற்ப வழக்கின் போக்கை மாற்றுவது / திசைதிருப்புவது, ஊழல் அரசியல்வாதிகளுடனான நேரடி தொடர்பு மற்றும் பேரம், என்கவுண்ட்டரின் பின்னணியில் உள்ள உண்மையை மறைக்க காவல் அதிகாரியையே கொன்று அதை கவர் ஸ்டோரி ஆக்குவது, முழுக்க முழுக்க திரிக்கப்பட்ட உண்மைகளை மக்களுக்கும் மீடியாவிற்கும் செய்திகளாய் கொடுப்பது என காவல் துறையின் இன்னொரு முகம் மீது வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது! பாண்டி மற்றும் அவன் நண்பர்களை என்ன செய்வது என ரூமிற்குள் அதிகாரிகள் பேசிக்கொள்ளும் அந்த ஒரு காட்சியே போதும், நம்மை வெலவெலத்துப் போகச்செய்ய!!

இந்த சிஸ்டத்திற்கு பலிகிடா ஆவது இன்ஸ்பெக்டர் முத்துவேல், பினாமி KK போன்றோரே. ஒரு காட்சியில் KK தெளிவாகவே சொல்கிறான் இன்னைக்கு உன்னை வெச்சு என்னைப் போட்டாங்க, இதுதான் இந்த game’ஓட first move. நாளைக்கு இன்னொருத்தனை வெச்சு உன்னையும் போடுவாங்க, that will be the last move of this game!’ என்று; ஆனால், அது முத்துவேலுக்கோ, ஆடியன்ஸுக்கோ அந்த இடத்தில் புரிவதில்லை! இந்த சிஸ்டத்தில் மக்களும், KK போன்றோரும் முத்துவேல் போன்ற அதிகாரிகளும் பார்வையாளர்கள் மட்டுமே, அவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் எதுவுமே செய்ய முடிவதில்லை; அவர்களே கடைசியில் பலியாக்கவும் படுகின்றனர்.

இந்த காட்சிகளிலெல்லாம் வசனம் ஒவ்வொன்றும் நெருஞ்சி முள்ளாய் தைக்கிறது! அவற்றுள் சில வசனங்கள்: இங்க systemதான் பெருசு, நாம எல்லாரும் வெறும் pawns’, ‘அதிகாரிங்க சொல்றதை செய்றதுதான நம்ம வேலை, அதை செஞ்சுட்டுப் போயிட்டே இருப்போம்’, ‘உன்னை உண்மையான திருடன்களையா பிடிக்க சொன்னேன், கேஸை தான க்ளோஸ் பண்ண சொன்னேன்?!’, ‘Quotaல உள்ள வந்துட்டு, System புரியாம பேசிக்கிட்டு!’, ‘அவர் நம்ம Caste தான் சார், பார்த்துக்கலாம்… அவருக்கும் ஏதாவது பண்ணிடலாம்’, ஒரு கொலை தற்கொலையாக மாற்றப்படும்பொழுது ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இன்னொரு போலீசிடம் சொல்வது நீயெல்லாம் எப்போதான் தொழிலைக் கத்துக்கப் போறியோ?’

வெற்றிமாறன் நினைத்திருந்தால் இவ்வளவு விஷயங்களையும் இன்னும் தெளிவாக, விரிவாகக் காட்டி ஒரு 3 மணிநேர திரைப்படமாக எடுத்திருக்க முடியும். அப்படி அவர் செய்யாத காரணம்,

1) திரைப்படம் அதன் மையப்புள்ளியை விட்டு விலகி செல்லும்

2) இந்த திரைப்படம் வெளியாவதிலேயே பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கும்

இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை இன்னும் பார்க்காமல் இருப்பவர்களுக்கும், டிவிடிக்களில் பார்ப்பவர்களுக்கும் ஒரு சின்ன விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்: இந்த படத்தை நீங்கள் பார்க்காவிட்டால் நிச்சயமாக அது இயக்குனர் வெற்றிமாறனுக்கோ, தயாரிப்பாளர் தனுஷுக்கோ எந்தவித நஷ்டமுமில்லை.. நஷ்டம் உங்களுக்குத்தான்!’

– #ரஹ்மான்

Visaranai-Tamil-Movie-Review-And-Rating-First-Day-Collections

Why is ‘VISAARANAI’ a very important film in Tamil cinema?

#Visaaranai is being widely celebrated by audience and critics!

**** People who have watched the film alone, can continue reading further ****

Our audience would have not have watched such a frightening film like ‘Visaaranai’, in the recent times. Am using the word ‘frighten’ here, not because of the brutally violent scenes in the first half! We have seen even worser brutality in Tamil cinema earlier. But, what actually shooks is the harsh truth that is spoken all-through the film; Visaaranai shows many hard-hitting truths in reality, which we will not want to believe!

The film basically deals with the police’s upper handedness on common man and innocent people, their inhuman brutality, corruption & politics inside this system and the loss of innocence in the face of injustice. The first half shows the blood-shedding inhuman methods followed by the Police to make the accused confess the truth, which are dreadfully frightening! The second half moves as an edge of the seat thriller that shows the politics, corruption, their negotiation with politicians and other dirty pages of the Police and Politicians’ relationship.

Visaaranai film is inspired from the true and horrific experience of Chandra Kumar, a Coimbatore-based auto-rickshaw driver who wrote a book, ‘Lock Up’, narrating his nightmarish 13 days in a police station. In a film that is based on a true incident that happened before 33 years, Director Vetrimaaran has brought in several contemporary issues and true events elegantly.

In the year 2011, Sadhik Batcha who was one onf the most important witness in the 2G scam case of 1,76,645 crore rupees, was found dead hanging at his house; it has not been proved whether it was a suicide or murder clearly till now! The KK character from this film, is comparable here. If Sadhik Batcha was alive and if he had spoken out / confessed few things, there would have been a very big storm in TN politics and the Indian politics (Note a dialogue in the second half – ‘Edhirkatchi pona aatchiyila oru periya deal sign pannappo, indha KK dhan ellaam panni kuduthaan’). Other than this, there are few other things such as the climax scene which reminds us of a Poilce encounter that hepppened in Chennai which created a lot of controversies among media and public, and a dialogue that refers to red-sanders wood smuggling.

Director Vetrimaaran putforths many other bold questions. There are scenes that asks loudly ‘Who is this system for, for whom it is functioning?’ and scenes that are referring to majority of the cops who work for the VIPs, affluent people and ill-treating the common man alone. In the second half, there are many ‘hard to believe’ facts which are told so subtly. The various brutal and callous methods followed by the police as part of the custodial tortures, the set-up suicides, fake forensic reports (influencing the doctors and other teams on getting fake postmortem reports and finger print reports in crime scenes), diverting / misleading a case as per their convenience, the police’s direct involvement with corrupted politicians & the negotiations with them, setting up fake encounters to hide the actual facts and finally presenting a cooked-up story for the media and also driving things till a debate show to be conducted on the same lines are all such shockers to know! The scene where the police officers discuss among themselves in a room, on how to handle Paandi and his friends is enough to make us drench in fear and shock!

People who fall prey to this system are the ones like KK and Inspector Muthuvel. In a scene, KK tells very clearly that ‘They finished me today using you, this is the first move of this game. You will be finished tomorrow by someone else that will be the last move of this game!‘; but, neither Muthuvel nor audience will not understand it there in that scene. The public, KK and Muthuvel are all mere spectators in this vast system, they will not be able to control or do anything over a point of time; they are the ones who become the scapegoat too in the end.

In all these scenes, the dialogues prick like a thorn. Few of them are – ‘Inga system dhan perusu… Naama ellaam verum pawns’, ‘Did I ask you to catch the thieves? Can’t you close the case?’, ‘Quota la ulla vandhuttu, system puriyaama pesikittu’, ‘Avarum namma caste dhan sir, paathukalaam… Avarukkum yethaavathu pannidalaam’, ‘Adhigaaringa solradhai seiradhu dhaana namma velai, adhai senjuttu poitte iruppom’ and a dialogue where a custodial murder is set-up as a suicide ‘Neeyellaam eppo dhan thozhilai kathukka poriyo?’

Vetrimaaran could have narrated all these things in a much more elaborated and clear manner, making it a film that runs for around 3 hours. But, he did not do so because:
1) The film would have deviated from its core-plot
2) There would have been unimaginable level of troubles for the film’s release itself

For people who have not watched such a film yet and others who are watching it in DVD, I would like to say only one thing:
‘If you are going to miss such a film in theater, that will never be a loss for the Director Vetrimaaran or Producer Dhanush… But, it is a loss only for you!’

– #Rahman

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s