‘Bangalore Days’க்கு கிடைத்த வரவேற்பு, ‘பெங்களூர் நாட்கள்’க்கு கிடைக்காதது ஏன்?

‘Bangalore Days’க்கு கிடைத்த வரவேற்பு, ‘பெங்களூர் நாட்கள்க்கு கிடைக்காதது ஏன்?

(Read the English version below)

சமீபத்தில் வெளியான #பெங்களூர்_நாட்கள் திரைப்படம் (மலையாள blockbuster திரைப்படம் Bangalore Daysன் ரீமேக்) பெரும் நட்சத்திரப் பட்டாளம் இருந்தும் காப்பாற்ற முடியாமல், எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனது! மலையாளத்தில் ஒரிஜினல் வெர்ஷன் பார்க்காதவர்கள் ‘சுமார், ஒரு தடவை பார்க்கலாம்’ என்றார்கள்; ஒரிஜினலைப் பார்த்தவர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள். வணிகரீதியாக படம் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியும் ஓடவில்லை, இந்த வாரம் முதல் எக்கச்சக்க அரங்குகளிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது ‘பெங்களூர் நாட்கள்’! ‘ரீமேக்’ படங்கள் எடுப்பது எவ்வளவு கடினம், என்னென்ன சிக்கல்கள் உண்டு, எப்படிப்பட்ட ஒப்பீடுகள் எல்லாம் வரும் என்பதெல்லாம் பெரிய topic. ‘பெங்களூர் நாட்கள்’ படத்தில் என்னென்ன பிரச்சினை என்பதை மட்டும் இங்கே பார்ப்போம். குறிப்பாக, ஏன் இப்படம் தமிழ் ரசிகர்களை கவரவில்லை? ஒரிஜினல் வெர்ஷன் பார்த்தவர்கள் இந்த படத்தை வெறுக்க காரணம் என்ன? என்பதைப் பற்றி பார்ப்போம்.

1) Casting / நடிகர்கள் தேர்வு (மேலே உள்ள படத்தைப் பார்த்தாலே புரியும்)

ரீமேக் படங்களைப் பொருத்தவரையில் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களை சரியாக தேர்வு செய்துவிட்டாலே போதும், அதுவே பாதி வேலை முடிந்ததற்கு சமம். ஆனால், இந்த படத்தில் இருப்பதோ படு சுமாரான, வணிக சமரசங்களுக்கு உட்பட்ட ஒரு பொருந்தாத casting (மோகன்லால் நடித்த சில படங்களில் சுந்தர்.C ஹீரோவாக நடித்தது போல, #Dabangg ரீமேக்கில் சிம்பு நடித்ததைப் போல). இவர்கள் எண்ணமெல்லாம் ரெண்டு மொழிக்கும் பொதுவான நடிகர்களை நடிக்க வைப்பதிலேயே இருந்துள்ளது, பொருத்தமான நடிகர்களை வைத்து எடுப்பதல்ல!

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வேறு எத்தனையோ நல்ல நடிகர்கள் தமிழிலும், தெலுங்கிலும் இருந்தும், தேடிப்பிடித்து சுமாரான நடிகர்களை நடிக்க வைத்தது போலிருந்தது. ஸ்ரீ திவ்யா மட்டும் ஓரளவு நடிக்க முயற்சி செய்திருந்தார். ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக perform செய்யக்கூடிய ரோலில், ராணாவும் ஓரளவிற்கு ஒத்துப்போனார். வேறு எவருமே சொல்லிக்கொள்ளும்படி இல்லை; பார்வதி மேனனால் கூட ஒரிஜினல் அளவுக்கு சிறப்பாக நடிக்க முடியவில்லை. பிரதாப் போத்தனுடன் ஒப்பிடுகையில், பிரகாஷ் ராஜின் நடிப்பும் மிக வழக்கமானதாக சினிமாத்தனமாகவே தோன்றியது. சரண்யா மட்டும் வழக்கம் போல நடிப்பில் டாப்! 🙂

2) Script Analysis

ஒரு படத்தை ரீமேக் செய்யும்பொழுது எந்தவொரு இயக்குனரும், ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்டை நன்றாக analyse செய்து அதன் plus என்ன, minus என்ன, சிறப்பம்சங்கள் அல்லது வெற்றிக்கு வித்திட்ட விஷயங்கள் என்னென்ன, அந்த படத்தை என்னவெல்லாம் ஸ்பெஷல் ஆக காட்டின போன்ற விரிவான ஆய்வு செய்த பின்னரே ரீமேக் வெர்ஷனை எப்படி எடுக்கலாம் என யோசிப்பர். (உதாரணம் – ஒக்கடுபடத்திலுள்ள சில குறைகளை எல்லாம் ஆராய்ந்து, தமிழுக்கு ஏற்றார்போல மாற்றி எழுதியதால் தான் தமிழில் மெகா ஹிட் ஆனது கில்லி‘. ‘LUCIA’ படத்தின் சிறப்பம்சம் என்ன என்பதையே புரிந்து கொள்ளாமல் எடுத்து சொதப்பிய எனக்குள் ஒருவன்‘, அளவுக்கு அதிகமாக மசாலா சேர்த்து, hero worship செய்து சொதப்பிய குசேலன்போன்ற படங்கள் சரியாக analyse செய்யப்படாத படங்களுக்கு உதாரணம்) ‘பெங்களூர் நாட்கள்’ விஷயத்தில் இந்த script analysis என்ற ஒரு விஷயம் நடந்ததா என்றே தெரியவில்லை.

Bangalore Days படத்தின் நீளம் அதிகம், படம் மெதுவாக நகர்கிறது என்கிற காரணத்தால் படத்தின் ஒரு சில முக்கிய காட்சிகளை ரீமேக்கில் நீக்கி, ஒரு சில கதாபாத்திரங்களில் தேவையில்லாத மாற்றங்களை செய்யும் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது?! Bangalore Days திரைப்படத்தை மற்ற ‘Feel Good’ திரைப்படங்களிலிருந்து என்னென்ன விஷயங்கள் வித்தியாசப்படுத்திக் காட்டியதோ, அது எதுவும் தமிழில் இல்லை.

3) Detailing & Direction

எந்தவொரு திரைப்படத்தையும், எந்தவொரு கதாபாத்திரத்தையும் அழகாக்குவது, கூர்மையாக்குவது சின்ன சின்ன detailing தான். அந்த detailing தான் இதே பாணியில் / genreஇல் வந்த மற்ற படங்களை விடவும், இதே போல் நாம் பார்த்திருக்கக்கூடிய மற்ற கேரக்டர்களை விடவும் இன்னும் ஒரு படி மேலே உயர்த்தி / வித்தியாசப்படுத்திக் காட்டும்.

Bangalore Days திரைப்படத்தில் துல்கர் சல்மான் தலையை சீவாமல் அலைந்ததற்கு கூட காரணம் இருந்தது; அது அந்த கேரக்டர் disorganized ஆக இருப்பதை, கவலையற்று இருப்பதைக் காட்டும் முறைகளில் ஒன்று. அதே போல, பெங்களூர் வந்த புதிதில் ஊர்நாட்டான் போல இருக்கும் நிவின் பாலி, இஷா தல்வாருடன் பழகுகையில் கொஞ்சம் westernized ஆக மாற முயற்சிப்பார்; பின்னர், இஷாவை பிரிந்ததும் இரண்டாம் பாதியில் முற்றிலும் வேறு விதமான body language மற்றும் ஸ்டைலை வெளிப்படுத்துவார் (அதாவது, இரண்டாம் பாதியில் ஊர்நாட்டான் போல பின்தங்கி இல்லாமலும், ரொம்ப நவீனமாக இல்லாமலும் ஒரு சாதாரண IT இளைஞனை பிரதிபலிப்பார்) மூன்று காலகட்டத்திலும் நடிப்பு, voice modulation எல்லாவற்றிலும் சின்ன சின்ன variation காட்டி அசத்தியிருப்பார்.

இதிலெல்லாம் 10% கூட தமிழ் வெர்ஷனில் பார்க்க முடியவில்லை. இதெற்கெல்லாம் காரணம் ஸ்கிரிப்ட்டை சரியாக உள்வாங்காத, இந்த கதைக்குத் தேவையான நடிப்பை நடிகர்களிடம் வேலை வாங்காத / அதற்கேற்றார் போல நடிகர்களை தயார்படுத்தாத இயக்குனரின் அலட்சியமே! Bangalore Days பார்த்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் மற்றும் கோபம் தான் ஏற்பட்டது; ஒரிஜினல் வெர்ஷன் பார்க்காதவர்களுக்கோ எக்கச்சக்க செயற்கைத்தனம் நிரம்பிய ஒரு சுமாரான படம் பார்த்த உணர்வு.

இன்னும் எத்தனையோ குறைகள் உண்டு இந்த ரீமேக்கில். படத்தின் இன்னொரு முக்கியமான காட்சி – திவ்யா மற்றும் சிவா முதன்முதலில் காதல் கொள்ளும் காட்சி, அவ்வளவு அழகாக மலையாளத்தில் எடுக்கப்பட்ட காட்சி (அதிலும், அந்த tattooவை நஸ்ரியா ரசிக்கும் இடம்) இங்கே ஏதோ பெயருக்கு எடுத்து வைக்கப்பட்டிருந்தது. ஒரிஜினலில், தன் காதலிக்கு தான் பரிசளித்த நாய்க்குட்டியை நீண்ட நாட்களுக்கு பிறகு சிவா பார்க்கும் காட்சி உணர்ச்சிப் பொங்க படமாக்கப்பட்டிருக்கும் (அந்த நாய்க்குட்டியை ஏதோ பஹத் பாசிலே வளர்த்தது போல இருவருக்கும் ஒரு பிணைப்பு இருக்கும்); இங்கோ எல்லாம் அவசர கதியாகவே படமாக்கப்பட்டிருந்தது!

‘நம்ம ஊரு பெங்களூரு’ என்கிற பாடலின் விஷுவலை இந்த இரண்டு திரைப்படங்களிலும் பார்த்தாலே, நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும்.

4) Lack of Strive for Perfection

சில B grade, C grade திரைப்படங்களில் அல்லது சின்ன பட்ஜெட் திரைப்படங்களில் ஒரு வழக்கம் உண்டு… ஒரிஜினல் வெர்ஷனில் இருக்கும் சில காட்சிகளை அதே அளவு சிறப்பாக எடுக்க முடியாவிட்டாலோ, பட்ஜெட் இல்லாவிட்டாலோ, நேரம் இல்லாவிட்டாலோ… அப்படியே அதே காட்சியை தமிழில் வைத்துவிடுவார்கள் (இவை எல்லாம் நடிகர்கள் முகம் தெரியாத wide angle shot ஆகவோ, long shot ஆகவோ தான் இருக்கும்) PVP சினிமாஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனம் தயாரித்து, பாஸ்கர் போன்ற ஒரு நம்பிக்கையான இயக்குனர் எடுக்கும் திரைப்படத்தில் இதையெல்லாம் யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். கிளைமாக்ஸில் வரும் பைக் ரேஸ் காட்சி, பெங்களூர் பாடலில் நிறைய ஷாட்கள், பாபி சிம்ஹாவின் பாரம்பரிய வீடு விற்கப்படும் காட்சி உட்பட இன்னும் பல உதாரணம் உண்டு.

நடிகர்கள் தேர்வு, பாத்திரங்களை வடிவமைத்த விதம், கோபி சுந்தரின் இசை (ஒரிஜினலில் அசத்தலான பாடல்களை அளித்தவர், இங்கே ஒரேயொரு பாடல் தவிர எல்லாமே சுமார் ராகம் தான்) என எதிலுமே ஒரு சிறந்த படத்தை recreate செய்யவேண்டும் என்கிற மெனக்கெடல் இல்லவே இல்லை. ஈடுபாடற்ற, அலட்சியமான போக்கே மேலோங்கித் தெரிந்தது. ’60 நாள்ல பேருக்கு ஒரு படத்தை எடுத்து முடிப்போம்’ என்பது போன்ற ஒரு அணுகுமுறையே தெரிந்தது, அதுவே இந்த படத்திற்கான முடிவையும் தேடித் தந்தது.

ஒரே கேள்வி கேட்கிறேன்.. வெறும் 7, 8 கோடியில் எல்லா விஷயங்களையும் பார்த்து பார்த்து முழுமையாக அஞ்சலி மேனனால் குறையில்லாத ஒரு படத்தைத் தர முடியும்பொழுது, அதை விட இரண்டரை மடங்கு பெரிய பட்ஜெட்டில் நம்மால் ஏன் எடுக்க முடியவில்லை? அதன் பேர் ‘மெத்தனப்போக்கு’ அல்லாமல் வேறு என்ன?!

நல்ல வேளை, நம் ரசிகர்கள் புண்ணியத்தால் இந்த படம் வெற்றியடையவில்லை…! சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற #பிரேமம், #சார்லி போன்ற திரைப்படங்களின் ரீமேக் நிறுத்தப்படுவதற்கு அல்லது தள்ளிப்போடப்படுவதற்கு இது ஒரு உந்துதலாக இருந்தால் மிகவும் நன்று!

P.S:
மேற்கூறிய காரணங்கள் போக, இக்கதையின் ஆணிவேரிலேயே ஒரு பிரச்சினை இருக்கிறது. மலையாள வெர்ஷனில் வருவதைப் போல், நம்மூர் மக்கள் யாருக்கும் பெங்களூர் மேல் அவ்வளவு craze கிடையவே கிடையாது. மலையாளிகளுக்கு பெங்களூர் போல அவர்கள் மாநிலத்தில் ஒரு பெருநகரம் இல்லாததாலும், சென்னையின் வெயிலும் மாசடைந்த நீரும் சரிப்படாததால் பெங்களூரை கொண்டாடுவார்கள்! நமக்குத்தான் சென்னை இருக்கிறதே! பெங்களூரில் வேலை கிடைத்த பின் அங்கேயே செட்டில் ஆவது வேறு விஷயம், ஆனால் பெங்களூர் தான் என் கனவுஎன சொல்லுமளவுக்கு தமிழ் மக்கள் இல்லாததும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயமே. அதை சமாளிக்க சின்ன சின்ன மாற்றங்களாவது செய்திருக்கலாம், படத்தின் authenticty’க்காக!

– #ரஹ்மான்

Why Bangalore Naatkal could not be successful like Bangalore Days

Why ‘Bangalore Naatkal’ could not be successful like ‘Bangalore Days’?

‘Bangalore Naatkal’ which released recently (Remake of the Malayalam blockbuster movie ‘Bangalore Days’) was not well-received by our audience; the huge star cast also could not save the movie. People who have not the watched the original version called it ‘Very average, Worth a watch’ and most people who enjoyed the original version teared it off. ‘Bangalore Naatkal’ did not do great business at the box office and the film has been removed from most number of screens this week. It is a vast topic to speak on how difficult it is to do a remake, what are all the cons and what type of comparisons would be made with the original. Let us see the problems with the remake of ‘Bangalore Days’ alone in this article. In particular, about why this film failed to attract our audience and why it is hated by people who liked the original.

1) Casting (You can understand it by seeing the above picture itself)

Coming to remake films, by choosing the right actors who would suit the characters aptly itself, the director’s work is half done. But, what we see in this film is a very average casting that has a lot of compromises with actors not fitting into the roles (Like how Sundar.C acted a hero in few remakes of Mohan Lal and Simbhu who acted in the remake of #DABANGG). The direction team’s primary motive was to cast actors common to both languages (Tamil and Telugu), rather than casting actors who would be apt for the roles (The Telugu version will have its shoot very soon).

In Tamil and Telugu industry, there were many better choices for every role in this film; even though the team was able to go with a mediocre casting only. Out of all the lead actors, Sri Divya alone TRIES to give her best to justify her role. Rana Daggubatti is also convincing to an extent, in a role that has more of subtle and underplaying perfroamnce. No one else did proper justification; even Parvathy Menon who reprised her role could not match her performance in the original. Even Prakash Raj’s acting looked a bit over done, comparing the measured performance of Prathap Pothen in the original. Saranya Ponvannan alone scores distinctively, as usual! 🙂

2) Script Analysis

Any director who wants to do a remake would analyse the original script completely to know its pluses, minuses, what made it successful and what are the things that made it a special film; after that only, the director will decide how the remake version should be (Example – ‘Ghilli’ became a mega hit because there were several changes in the script after assessing the plus and minus of its original version ‘Okkadu’. Likewise ‘Enakkul Oruvan’ failed at the box office because the remake director did not have a clear understanding on the uniqueness of ‘Lucia’; ‘Kuselan’ flopped because of too much of ‘hero worship and masala overdosage than the original version). Coming to ‘Bangalore Naatkal’, I am really not sure if such a script analysis happened for this film.

Just because ‘Bangalore Days’ was a bit lengthier and it was slow paced, the team has insanely removed some pivotal scenes in the remake and has made unnecessary changes to few characters. What type of intelligence it is? ‘Bangalore Naatkal’ did not have anything that differentiated ‘Bangalore Days’ from the other, usual ‘feel good’ movies!

3) Detailing & Direction

A lot of minute detailings in writing is what sharpens every character and makes a film more beautiful and relatable. Those detalings are what elevates or distinguishes a film and its characters, than other similar films or characters we would have already seen in the same genre / style.

There was even a reason for why Dulquer Salman was seen uncombed all through the film; that showed how organized and carefree the character Arjun was! Likewise, Nivin Pauly who was so old-fashioned when he is new to Bangalore, tries to become trendy after meeting Isha Talwar; later, after Isha leaves him, he would exhibit a completely different body language and style (reflecting a normal IT youngster, who is neither so outdated nor too trendy) In all those 3 stages, Nivin gave an outstanding performance showing some minute variations in acting (even in dialogue delivery).

Not even 10% of all these were seen in the Tamil version. The main reason for this is the director’s neglection of not understanding the original script properly, not utilizing the actors efficiently / preparing the actors for what was expected actually! People who liked the original version were disappointed and frustrated, whereas people who have not watched the Malayalam version had a feeling of watching a very average film with lots of fake aesthetics.

There are a lot more flaws in this remake. A pivotal scene which beautifully portrayed the first love making scene of Shiva and Divya (especially where Nazriya looks at Fahadh’s tattoo) was filmed just for namesake in the Tamil version. In the original, there is a scene where Shiva sees the dog that he had gifted to his girlfriend after many years; that scene was filmed so emotionally (the bonding between that dog and Fahadh would look so real (as if Fahadh himself grew it up), whereas everthing has been made in a hurry in the Tamil version!

If you look at the visuals of the song ‘Namma Ooru Bangalooru’ in both versions itself, you will be able to understand what I am trying to say.

4) Lack of Strive for Perfection

You can note one thing in some B grade, C grade films or low budget remake films… If the remake team is not able to recreate some scenes which were too good in the original version due to budget or time constraints, they will use the same shots in the remake without shooting them (these will be mostly wide angle shot or long shot, where the actors’ face will not be clearly visible) But, no one would have expected such a thing happening in a film that is produced by a giant company like PVP Cinemas and directed by a promising filmmaker like Bhaskar. The shots which were used from the original can be seen in the climax bike race scene, few shots in the Bangalore song, the scene where Bobby Simha’s family sells their ancestral house and few other scenes.

Whether the choice of actors or the way the characters were sketched or Gopi Sunder’s music (who gave fantastic songs in the original, has managed to deliver only 1 good song in the Tamil version), there was never a strive for perfection to recreate a perfect entertainer. Failing to give the fullest on direction and scripting part with a convenient attitude, the film’s output became average.

I just have one question to ask… When director Anjali Menon can give a flawless entertainer (with so much care in the writing and making) in a budget of 7 to 8 crores, why cannot we give it in a budget that is more than double times the original? If it is not ‘lethargy’, what else it is?

Glad that this film did not become a hit; thanks to our audience! Hope this might help in motivating the producers to halt or postpone the remakes of various other films such as #Premam and #Charlie!

P.S:
Other than the reasons stated above, this remake has got another issue too. Unlike as it is shown in the Malayalam version, Tamilnadu people are not that crazy about Bangalore. A part of Malayalis might celebrate or go crazy over Bangalore city because they do not have such a metro city in Kerala and they will not be comfortable with Chennai because of the humidity and water pollution! But, we people have ‘Singara Chennai’ already B-) Settling in Bangalore after getting a job there is different, but TN people are never like ‘Bangalore is my dream’ which is an important point to be noted. There could have been minor changes in that aspect to bring in the factor of authenticity!

– #Rahman

‘FOLLOW’ us at https://boxofficebossblog.wordpress.com to read more movie reviews & interesting cinema articles… Movie buffs, do subscribe..!!

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s