‘மிருதன்’ – வரவேற்கத்தக்க முயற்சியா? இல்லை, ரசிகர்களை ஏமாற்றும் வழக்கமான கமர்ஷியல் படமா?

(Read the English write-up below)

** மிருதன் திரைப்படம் பார்த்தவர்கள் மட்டும், மேற்கொண்டு படிக்கவும் ***

#மிருதன் திரைப்படம் வெளியான நாளிலிருந்து, ஒரு தரப்பினர் இப்படத்தை ‘புதிய முயற்சி’ என பாராட்டுகின்றனர் இன்னொரு தரப்பினர் ‘இது வழக்கமானதொரு கமர்ஷியல் படமே, ரொம்ப சுமாரான படம்’ என குறைகளைக் கொட்டித் தீர்க்கின்றனர். நான், இதில் இரண்டாம் வகையை சேர்ந்தவன்.

படத்தின் குறைகள் என்னவென்று சொல்வதற்கு முன், படத்திலுள்ள சில சிறப்பம்சங்கள் மற்றும் நல்ல விஷயங்களை சொல்லிவிடுகிறேன். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஹாலிவுட் மற்றும் ஜப்பானிய சினிமாக்களில் Zombie திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இத்தனை ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் எவரும் Zombie திரைப்படம் எடுப்பதைப் பற்றி நினைத்திடவில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில், தமிழின் முதல் Zombie திரைப்படத்தை எடுக்க நினைத்த முயற்சிக்காக இயக்குனர் ஷக்தி சௌந்தரராஜனைப் பாராட்டலாம்! படத்தில் வரும் Zombieக்களின் மேக்கப் மற்றும் VFX நன்றாக இருந்தது. D.இமானின் இசையில் இரண்டு பாடல்கள் ரசிக்கும்படி இருந்தது. படத்திலுள்ள குறைகளையும் மறக்கும்படி, ஆங்காங்கே படத்தையே தூக்கி நிறுத்தும்படி இருந்த நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பைப் பாராட்டலாம்; அவர் தான் இப்படத்தின் மிகப்பெரிய பலம் என சொன்னால் மிகையாகாது! இவை போக, முதல் பாதியில் ரசிக்கும்படி இருந்த ஒரு சில நகைச்சுவைக் காட்சிகளை சொல்லலாம்.

இதை தவிர, இந்த படத்தில் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி எதுவுமில்லை! சொல்லப்போனால், ஸ்கிரிப்ட் என்ற ஒன்றே இல்லை. ஒண்ணே முக்கால் மணிநேரம் ஓடும் திரைப்படத்தில், ஒரு மணி நேரத்திற்கு மேல் கதைக்குத் தேவையில்லாத கடுப்பேற்றும் காமெடி, சுவாரஸ்யமில்லாத ரொமான்ஸ் என ஓப்பியடித்திருக்கிறார்கள். படத்தில் ஆங்காங்கே நல்ல சுவாரஸ்யமான காட்சிகளும் இருக்கின்றன (zombie’க்களை முதன்முதலில் ஜெயம் ரவி பார்க்கும் காட்சியை சொல்லலாம்), ஒரு சில நல்ல உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும் உண்டு; ஆனால், அவையெல்லாம் ரொம்ப நேரம் அல்ல!

இந்த திரைப்படம் mainstream ஆடியன்ஸிடையே ஓரளவு வரவேற்பைப் பெற்று, வெற்றியடைய வாய்ப்புகள் அதிகம் உண்டு. காரணம், Zombie  திரைப்படங்கள் பார்த்திராத மக்களிடையே ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போல இது மற்றுமொரு சாதாரண horror comedy திரைப்படமாக பிடித்துப் போய்விடும். ‘மூணு கண்ணன் வர்றான், புள்ளை பிடிக்குறவன் வர்றான்’ என சொல்லி சின்னப் பிள்ளைகளுக்கு சோறூட்டுவது போல ஈஸியாக அவர்களை confuse பண்ணி convince செய்துவிடலாம்.

இயக்குனர் ஷக்தி சௌந்தரராஜனைப் பற்றி சொல்ல வேண்டுமெனில், தன் முந்தைய படங்களிலும் இதே தவறை செய்தார் ‘முதல் முழு நீள Bank robbery திரைப்படம்’, ‘முதல் doggy திரைப்படம்’, ‘முதல் zombie திரைப்படம்’ என தேவைக்கு அதிகமாக hype ஏற்றி, சுமாரான படங்கள் கொடுப்பதே இவர் ஸ்டைல் என்றாகிவிட்டது! வலுவான ஸ்கிரிப்ட் இல்லாமல் என்ன படம் எடுத்தாலும், output சுமாராகத்தான் இருக்கும் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் இவரது மூன்று திரைப்படங்களும்.

நான் ‘மிருதன்’ படத்தை Hollywood படங்கள் அளவுக்கு எதிர்பார்க்கவும் இல்லை, அவைகளோடு ஒப்பிடவும் விரும்பவுமில்லை. இவரது திரைப்படங்களில் ஹாலிவுட் திரைப்படங்களில் இருந்து உருவிய காட்சிகள் இருக்கும், அது கூட பிரச்சினை இல்லை. Plagiarism என்கிற ஒரு விஷயத்தைப் பற்றி நான் இங்கு பேசவே இல்லை. ஆனால், எடுத்துக்கொண்ட கதைக்கு நேர்மையாக, படம் ஓடுகின்ற 108 நிமிடங்களுக்கு விறுவிறுப்பாக ஒரு படத்தை மட்டுமே எதிர்பார்த்தோம்! படம் தொடங்கியதிலிருந்தே அவ்வளவு செயற்கைத்தனம், இந்த கதைக்கான seriousness என்பது கொஞ்சமும் இல்லை. எதற்கெடுத்தாலும் காமெடி, Zombie’ஸின் தீவிரம் அறிந்த காவல் அதிகாரிகளே அவைகளை சுடும்பொழுது ஜாலியாக விளையாடிக் கொண்டிருப்பது, zombie’க்களைப் பார்த்து ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ என்கிற ரீதியில் மொக்கை காமெடி பண்ணுவது (முதல்ல பொண்ணுங்களைப் பார்த்து இதை சொன்னாங்க, அடுத்து போலீஸைப் பார்த்து, அதுக்கப்புறம் பேய் படத்துல… இப்போ Zombie’க்களையும் காமெடி பீஸ் ஆக்கியாச்சு), படம் முடியப்போகும் தருவாயிலாவது ஏதாவது சுவாரஸ்யமாக செய்வார்கள் என எதிர்பாக்கும்பொழுது கதைக்கு எந்த வகையிலும் பயனில்லாத ஸ்ரீமன் கேரக்டரை அறிமுகப்படுத்தி சொறி சொறியென சொறிகிறார்கள் :/ போகிறபோக்கில், படு சீரியஸான காட்சிகள் கூட வெறும் ஜோக்காகவே தெரிகிறது.

‘லாஜிக்கா, அப்படின்னா என்ன?’ என்று கேட்கும் ரீதியில் திரைக்கதை அதன் இஷ்டத்துக்கு கேட்பாரற்று செல்கிறது. கமிஷனர் ஆபீசில் கடிபடும் காவல் அதிகாரி ‘2 minutes noodles’ போல இரண்டே நொடியில் முழுமையாக zombie ஆக மாறிவிடுகிறார்; அந்த டாக்டருக்கு மட்டும் ஒரு நாள் முழுக்க grace period கிடைக்கிறது. இந்த படத்தின் கதை Resident Evil திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தழுவியுள்ளது, அதே போல பல ஆங்கில zombie படங்களின் தாக்கம் எக்கச்சக்கமாக உள்ளது; இதையெல்லாம் செய்தும் இயக்குனரால் ஒரு முழுமையான திரைப்படத்தைக் கொடுக்க முடியவில்லை. தன்னை சுற்றி ஆயிரக்கணக்கில் zombie’க்கள் வந்தாலும், தன் கையில் இரண்டே இரண்டு hand pistol மட்டும் வைத்துக்கொண்டு சுட்டுத்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார் ஹீரோ. அவர் துப்பாக்கியில் எப்போது தான் தோட்டாக்கள் தீரும் என நாம் காத்திருக்க, ஒரு 300, 400 தடவை சுட்டு முடித்த பின் பொறுமையாக reload செய்கிறார் 😛 அவர் கையில் இருப்பது Hand gun’ஆ இல்லை Machine gun’ஆ என பல முறை நம் கண்ணை நாமே சரிபார்க்க வேண்டியுள்ளது!

இப்படிப்பட்ட ஒரு த்ரில்லரில் ரசிகர்களை மிரளச்செய்யும் வகையில் திரைக்கதையில் ஒரு பிரச்சினையும், அதற்கான தீர்வு ரசிகர்களை ஆர்ப்பரிக்கச் செய்யும் வகையிலும் இருக்கவேண்டும்; ஆனால், அதற்கான எந்த மெனக்கெடலும் இப்படத்தில் இல்லை. Zombie’க்களை சமாளிக்க ஒரு வழி என இவர்கள் அதிக பட்சம் யோசித்தது அவற்றின் மீது இரண்டு சொம்பு தண்ணீரை மொண்டு ஊற்றுவது :/ (இதே போன்றதொரு ஐடியா Signs என்கிற ஆங்கில திரைப்படத்தில் Aliens’ஐ விரட்ட பயன்படுத்தப்பட்டிருக்கும்; ஆனால், அதை காட்டிய விதமும் அதற்கான லாஜிக்கும் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்)

மிருதனில் ஒரு சில காட்சிகளில் ‘அடடா.. அடுத்த சீன் செம்மயா இருக்கும் போல’ என நாம் நிமிர்ந்து உட்காரும்பொழுதெல்லாம் அடுத்த சில நொடிகளிலேயே ‘அந்த சீன் எல்லாம் இங்கே இல்ல, இது வழக்கமான படம் தான்’ என பின்னந்தலையில் பொக்கென அடிக்கிறார் இயக்குனர் 😦 ஒரு காட்சியில் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் வரும் வேனை நூற்றுக்கணக்கான zombieக்கள் சுற்றி வளைத்த பின், என்ன நடக்கப் போகிறது என நாம் பதறிப்போகிறோம், ‘இடைவேளை’க்கான மிகச் சரியான காட்சி அது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என நாம் யோசித்துக்கொண்டிருக்கையில், கதாநாயகன் அசால்ட்டாக வண்டியை ஒட்டிக்கொண்டு செல்கிறார்; நமக்கோ ‘அட ராமா’ என்று ஆகிவிடுகிறது (அந்த இடத்தில் மழை வருவதைப் போல வைத்திருந்தாலாவது, கொஞ்சம் சுமாராக ‘லாஜிக்’ இருப்பதைப் போல் தோன்றியிருக்கும்). இன்னொரு காட்சியில் Zombie’க்களை சமாளிக்க ஏதேனும் பொருள்களைத் தேடி ஒரு Super market’இன் உள்ளே அனைவரும் நுழைவர் (இது போல ஒரு super market காட்சி கிட்டத்தட்ட எல்லா zombie படங்களிலுமே உண்டு); சரி, இனிமேலாவது படம் சூடு பிடிக்கும் என நினைத்தால், super market’இல் ஒரு Lays சிப்ஸ் பாக்கெட் மற்றும் துணிக்கொடி கட்டும் கயிறை வைத்து அங்கேயும் காமெடிதான் செய்கிறார்கள். கடைசியில் ஹீரோவின் தங்கையை zombie கடிக்கும்பொழுது உச்சபட்சமாக ‘உங்கள் தங்கை தான், நம்ம மருந்தே’ என ஒட்டுமொத்தமாக ரீல் அறுந்துபோகும்படியாக பெரிய காமெடி பண்ணுகிறார்கள் (இதே போல ஒரு விஷயம் Species-2 படத்தில் வரும், அது எவ்வளவு தெளிவாக நம்பும்படியாக இருக்கும் என்பதை அப்படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!)

இயக்குனர் ஷக்தி சௌந்தரராஜன் ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு திரைப்படம் பண்ண நினைத்தது தவறல்ல, ஆனால் அதற்கு முதலில் அவர் தனது ஸ்கிரிப்ட்டில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ‘யாரும் தொட்டிடாத புதிய genre, கொஞ்சம் மசாலா அயிட்டங்கள், நிறைய ஹாலிவுட் inspiration’ என்ற அவரது formula’வை மறந்துவிட்டு கதைக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். படம் ஆரம்பித்த 25 நிமிடங்களுக்குப் பிறகு zombie காட்டப்படுகிறது, zombieக்கள் அறிமுகமாகி 20 நிமிடத்தில் interval; இரண்டாம் பாதி முழுக்க முழுக்க கதையே இல்லாமல் ஒப்பேத்திவிட்டு ‘மிருதன் 2’ வேறு வரும் என்கிறார்கள் (எப்பா சாமி, போதும்பா!)

ஒரு புது genreஐ எடுத்து தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவர்களை ‘take it for granted’ என ஏமாற்றி ஒரு ஹிட் கொடுக்க நினைப்பது எவ்வளவு பெரிய cheating?! இயக்குனர் ஷக்தி சௌந்தரராஜன் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் என எந்த ரசிகர்களுக்கு ஏற்றவாறு வேண்டுமானாலும் படம் பண்ணட்டும்; ஆனால், ஸ்கிரிப்ட்டிற்காக மெனக்கெடாத வரை இன்னும் எத்தனை புதிய genreகளை முயற்சித்தாலும் அவர் செய்வது ‘புதிய முயற்சி’ எனவும் ஆகாது, தமிழ் சினிமாவுக்கு எந்த பயனையும் அளிக்காது! மாறாக படிக்காத, ஆங்கில சினிமாக்கள் பார்த்திடாத லட்சக்கணக்கான mainstream ஆடியன்ஸை ஏமாற்றுவது என்று தான் ஆகும். சமரசம் இல்லாமல் ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் எடுப்பது என்றால் என்ன? தான் எடுத்துக்கொண்ட கதைக்கும், genreக்கும் நேர்மையாக இருப்பதா, இல்லை ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி காமெடி, காதல் எல்லாம் கலந்து கொடுக்கிறேன் என சொல்லி கதையை மறந்து வேறெங்கோ செல்வதா?

சமூகம் / மக்கள் மீது பெரிய அக்கறையோ, கவலையோ இல்லாத ஒரு இளைஞன் தனது தங்கைக்காகவும், காதலிக்காகவும் உயிரை பணயம் வைத்து Zombie’க்களை எதிர்த்து போராடுகின்றான் என்பது ஒரு கமர்ஷியல் படத்திற்கான அற்புதமான one-line; ஆனால், இந்த ஒரு ஐடியாவை மட்டுமே வைத்துக்கொண்டு ஒண்ணே முக்கால் மணிநேரம் டீ ஆத்திக்கொண்டிருந்தால் என்ன சொல்வது?

பி.கு:

“ரொம்ப பேசாதிங்க… வேறு எதைத்தான் புது முயற்சி’ன்னு ஒத்துக்குவீங்க”ன்னு யாராச்சும் என்னைக் கேட்டீங்கன்னா.. Time travel’ங்கிற ஒரு சிக்கலான விஷயத்தை ரொம்ப simple ஆக, தமிழ் ஆடியன்ஸுக்கு ஏத்த மாதிரி காமெடி, ரொமான்ஸ், சென்டிமென்ட் எல்லாம் கலந்து, லாஜிக் குறைகளும் இல்லாம கொடுத்த ‘இன்று நேற்று நாளை’ படத்தை சொல்லலாம்…!

ஒரு புதிய genre’ஐ முயற்சித்துவிட்டதால் மட்டும், அதை ‘புது முயற்சி’ என சொல்லிவிட முடியாது; அதை கொஞ்சமாவது நேர்மையாக அணுகியிருக்க வேண்டும், இல்லையேல் ஒரு படத்தை சொதப்பலாக எடுத்து அந்த genreஐ கலங்கப்படுத்தியதாகத்தான் அர்த்தம். பாம்பு, மாடு, நாய், யானையை எல்லாம் வைத்து படம் எடுத்த இயக்குனர் ராமநாராயணன் கூட அந்த மிருகங்களை முழுமையாக பயன்படுத்தி, அவைகளை முன்னிறுத்தி படமெடுத்தார். இங்கே, zombie’க்கள் வெறும் கறிவேப்பிலை போலத்தான் தெரிந்தன; லாஜிக் இல்லாத ஹீரோயிசமும், கதைக்கு தேவையில்லாத காமெடியுமே பிரதானமாக இருந்தது (இவர்கள் எடுக்க நினைத்தது ஒரு காமெடி Zombie படம் என்றால், அதையாவது உருப்படியாக எடுத்திருக்க வேண்டும், உதாரணம் – Zombieland).

‘மிருதன்’ படத்தினால் நடந்த ஒரு நல்ல விஷயம்… இனிமேல் தமிழில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சில நல்ல zombie படங்கள் வர வாய்ப்புண்டு

எழுதியவர்: ரஹ்மான்

'மிருதன்' - வரவேற்கத்தக்க முயற்சியா.. இல்லை, ரசிகர்களை ஏமாற்றும் வழக்கமான கமர்ஷியல் படமா

Is ‘MIRUDHAN’ an appreciable attempt? OR It is just another commercial film that cheats our audience?

** People who watched MIRUTHAN movie alone can read further **

From the day of its release, #Mirudhan has been praised as a ‘New attempt’ by a set of audience, whereas another set of people are tearing it off as ‘a routine commercial film, very average film’. I fall under the second category.

Before talking about the defects in this film, let me tell about its specialities and plus points. Hollywood and Japanese cinema has been doing ‘Zombie’ movies for more than a half century; but, no one has thought about doing a ‘Zombie’ film in South Indian languages all these years. So, let us appreciate Director Sakthi Soundararajan for attempting to do the first Zombie film in Tamil! The make-up for Zombies and the VFX was good. Two songs in D.Imman’s music was likable. Jayam Ravi’s acting covered many flaws in the film and it backboned the whole movie; it is not an exaggeration saying that Jayam Ravi was the biggest plus point of this film! Few comedies in the first half were enjoyable.

Other than these, there was nothing that was so impressive in the whole film. In fact, there wasn’t a script at all! In a film that runs for just 1 hours and 45 minutes, more than an hour is spent on annoying comedy and uninteresting romance. There are few engrossing moments here and there (say the scene where Jayam Ravi sees the Zombies for the first time) and there are some emotional scenes that works well; but, they did not stay long unfortunately!

There are high chances for this film becoming a hit, getting an above average response from ‘mainstream’ audience. Reason being, people who have not watched any ‘Zombie’ movies will start enjoying it like any other usual horror comedy film like ‘Kaanchanaa’ or ‘Aranmanai’. The audience can be easily convinced by confusion, as like feeding the kids telling them frightening stories.

To tell about Director Sakthi Soundararajan, he has already did the same mistake in his previous films also; giving too much of hype with tags like ‘First ever full-length bank robbery film’, ‘First ever doggy movie’, ‘First ever Zombie film’ and delivering an average film has become his style! His 3 films are a perfect example to say ‘whatever the plot or genre may be, if the script is not strong, the output will be mediocre only’.

Neither I expected ‘Miruthan’ to be like a Hollywood film nor I wanted to compare it with them. In his films, Sakthi Soundararajan used to have scenes lifted from Hollywood films (that is not the problem now). I do not want to speak about Plagiarism also here. All we expected is a film that is honest to the script and is engaging through-out the run-time of 108 minutes! The film had too much of fakeness right from the beginning, there was no seriousness seen all-through which this script demanded. It was just comedy for anyting and everything; the Police officers who knew the severity of the situation were playing lethargically while shooting the Zombies and there were irritating comedies such as saying ‘Ennamaa Ippadi Panreengaleymaa’ to Zombies. When we expect something interesting at-least towards the end, characters that are in no way useful to the film such as the Security (Sriman) are introduced, adding to our worry :/ This care-less attitude in writing alters many serious scenes also as comedy scenes.

The screenplay is too sluggish moving pointlessly, with an approach of ‘Logic, WTF it is?!’. The cop who gets bitten by a zombie in the Commissioner office, transforms completely into a Zombie instantly like a ‘2 minutes noodles’; whereas, the Doctor gets a ‘grace period’ for a whole day! :/ The plot of this film is loosely inspired from ‘RESIDENT EVIL – Part 2’ and has heavy references from few other Hollywood zombie films; even after doing all these, the director has failed to give a complete entertainer. We see thousands of zombies approaching the hero fastly, but he shoots them all down with just 2 pistol guns in his hand. While we are wondering if his guns will never run out of bullets, he reloads its slowly after shooting out some 300 or 400 bullets 😛 We are left dumbstruck to have a vision test, to know if he is holding a Hand gun or Machine gun in his hands.

For such a thriller, there must be a astounding problem that puts the audience in fear and later a solution for the same which makes them shout and enjoy; but, there was no striving for that in this film. One way that they decided to tackle the Zombies is by pouring a mug of water on them :/ (Similar idea was seen in the Hollywood film ‘Signs’ to get rid of aliens, but the way it was shown and the logic for it made it so perfect).

There were few scenes in Miruthan which made us feel like ‘Oh.. the next scene is going to be great’, but in the next few seconds itself, the director slaps in our backhead saying ‘Do not expect such things here, it is just a routine film’ 😦 In a pivotal scene where a van is surrounded by hundreds of Zombies, we are horrified about what is going to happen next and that is a perfect scene for an interval block! While we are waiting something interesting or intelligent is about to happen, the hero drives the van ‘just like that’ and that is a ‘facepalm’ moment for us (it would have been a little convincing, if the director had written that scene as if rain is showering and the zombies get scattered). In another scene, all the pivotal characters enter a super market to see if they can get anything to handle the Zombies (such a Super market scene use to be there in all Zombie films); while, we expect the film to be gripping at-least after that, all we get is comedy again with a mock on a Lays chips packet and a rope that is used to dry clothes. Finally, when the hero’s sister is bitten by Zombie, we see an ultimately insane comedy where the doctors says ‘Your sister’s body is our medicine, she is the anti-biotic’ (similar type of idea was seen in SPECIES-2 film, but the explanation in that film was too detailed and belieavable; here it was just a senseless humour).

If Director Sakthi Soundararajan wants to do a film in Hollywood style, that isn’t wrong; but, better he respect his audience and focus in the script first. He should give up his sick formula of ‘New / untouched genr + Few masala stuffs + Lot of Hollywood inspirations’ and start giving more importance to the story. The story begins exactly after 25 minutes and we have the interval break 20 minutes after that; the whole second half just wanders without anything called a story. Adding to this, we are frightened with ‘Miruthan 2’ – a sequel alert (God, please save this state!)

In the name of introducing a new genre to Tamil audience in a likable template to them, these type of directors are ‘taking them for granted’ to give a hit film and just CHEATING them! Whatever new genre Sakthi Soundararajan may attempt, until he strives for perfection in writing, his films will never be treated as a ‘Novel or different attempt’ or those films will not bring any benefit  to the industry in any means. Instead, it is just cheating lakhs of audience who are either uneducated or people who do not watch Non-Indian films. So, What is the definition of a good film with no compromises? Is it being honest to the film’s story / genre (or) giving a film that deviates a lot from its plot in the name of commercial viability?

‘Miruthan’ had an excellent one-line for a good commercial film where a selfish youngster who does not care much about the society and people fights against Zombies for the sake of his sister and the girl he loves; but, the director just had this idea alone and filled the whole movie with unwanted stuffs.

P.S:
I would call films like “Indru Netru Naalai” as an appreciative attempt, where the concept of ‘Time Travel’ was told in a very simpler way without much flaws, presented in a likable format for our audience!

Just because someone tries a different genre, it can never be a ‘different attempt’; the director should have approached it with utmost honesty or else it is just wasting the first film in that genre. Even Director Rama Narayanan who made films with Snakes, Cows, Elepahants and Dogs, utilized them all very well, focusing on them primarily. Whereas in Miruthan, the Zombies are just a part of the ambience; the logicless heroism and unnecessary comedy was predominant here (if their intention was to make a good comedy film on Zombies, they should have made it sincerely, like ZOMBIELAND)

One good thing that will happen because of a film like MIRUTHAN is… Tamil industry will see better Zombie films with good scripts!!

Written by: Rahman

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s