Decoding ‘24’ the Movie!

Decoding ‘24’ the Movie!

(Read the English write-up below)

சமீபத்தில் #சூர்யா நடிப்பில் வெளியான #24 திரைப்படம் விமர்சகர்களாலும், பெரும்பாலான ரசிகர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒரு புறமிருக்க, ஒரு சிலர் ‘படம் பிடிக்கவில்லை’ ‘படம் புரியவில்லை’ என்று சொல்கிறார்கள். இவை குறித்து தெளிவுபடுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.

(#24 திரைப்படம் பார்த்தவர்கள் மட்டும் மேற்கொண்டு படிக்கவும்.. Heavy Spoilers Ahead!)

#13B, #மனம் போல அருமையான பொழுதுபோக்குத் திரைப்படங்களைக் கொடுத்த இயக்குனர் விக்ரம் குமாரின் ‘24’ என்கிற இந்த திரைப்படமும் ரொம்பவே
தனித்துவமான எண்டர்டைனர். இழுத்தடிக்கும் காதல் காட்சிகள், பெரிதாக ஈர்க்காத பாடல்கள் என சில குறைகள் இருந்தாலும், மொத்த படமும் அசத்தலாகவே இருந்தது (காதல் காட்சிகளும் ‘time travel’, ‘time freeze’ என கதையை ஒட்டி வருவதாலேயே, பெரிதாக உறுத்தவும் இல்லை).

தான் எடுத்துக்கொண்ட ‘Time travel’ என்கிற கான்செப்ட்டில் சந்து, பொந்து விடாமல் புகுந்து விளையாடியிருக்கிறார் விக்ரம் குமார். படத்தின் ஒவ்வொரு காட்சியிலுமே அவ்வளவு detailing இருந்தது. லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், அவற்றை பெரிதாக கவனிக்கவிடாமல் பார்த்துக்கொள்கிறார் இயக்குனர். உதாரணத்திற்கு, படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; #ஆத்ரேயா தான் முழு படத்தையும் நகர்த்தி செல்பவன். அவனது கதாபாத்திரம் குறித்து எந்த குறையுமே காண முடியாத அளவு கச்சிதமாக இருக்கும். அவன் கடைசி வரை புத்திசாலியாகவே காட்டப்பட்டிருப்பான். முதல் காட்சியில் ஈவு இரக்கமே இல்லாமல் சேதுராமனின் மனைவியைக் கொல்வது, மணியைக் கொன்றுவிட்டு அவன் கையோடு சேர்த்து கடிகாரத்தை வெட்டி எடுப்பது, மணியின் கையில் கடிகாரத்தைத் தவறாக கட்டி தன் வீட்டிற்கு வரவைப்பது, சத்யபாமாவிடம் Cheque book விஷயத்தில் மாட்டிக்கொள்கையில் மணியை பதற வைத்து அவனோடு சேர்ந்து அந்த கடிகாரத்தைத் தொடுவது, மித்திரன் மூலமாக பேசி மணியை அந்த கடிகாரத்தில் மாற்றங்கள் செய்ய வைப்பது, சர்ச் காட்சியில் தானும் மணியோடு சேர்ந்து 26 வருடங்கள் பயணிப்பது என படம் முழுக்க ஆத்ரேயா ஒரு அச்சுறுத்துகிற வில்லனாகவே வலம் வருகிறான்.

இயக்குனர் விக்ரம் குமாரின் உழைப்பும், திறமையும் பல காட்சிகளில் பளிச்சிடுகிறது. ஒரு புது ‘Time Travel’ கடிகாரத்தை உருவாக்க முயற்சித்து ஆத்ரேயாவும், மித்ராவும் பல முறை தோற்றுவிட்டார்கள் என்பதை வசனங்கள் ஏதுமில்லாமல் குப்பையில் கிடக்கும் உடைந்த கடிகாரங்கள் மூலம் புரிய வைத்துவிடுகிறார். குறிப்பாக, உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய எக்கச்சக்க விஷயங்களைக் கொண்ட கடைசி 30 நிமிடங்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவற்றில் சில கீழே:
– சர்ச் காட்சியில் கடிகாரத்தைத் தொட்ட மணியும், ஆத்ரேயாவும் 26 வருட ஞாபகங்களுடன் பின்னால் பயணிக்கிறார்கள். கால்களும், இளமையும் திரும்பிவிட்ட சந்தோஷத்தில் காரை விட்டு இறங்கி ஆடும் ஆத்ரேயாவைப் பார்த்து ஒன்றும் புரியாமல் விழிக்கிறான் மித்திரன். ஏனெனில், அவன் கடிகாரத்தைத் தொடவில்லை; அவனுக்கு எந்த ஞாபகமும் இல்லை.
– சென்ற முறை சேதுராமன் எப்படி தப்பித்தான் என தெரிந்ததால் தன் ஆட்களை அந்த வீட்டின் பின்புறம் அணுப்புகிறான், வீட்டின் மின்சார இணைப்பைத் துண்டிக்க சொல்கிறான், வாசலில் ஆள் தேவை என்பதால் காவலாளியை சுடாமல் விடுகிறான், வீட்டிற்குள் வந்ததும் கேஸ் சிலிண்டரைத் தேடி நகர்த்தி வைக்கிறான்.
– அது சரி, ஏன் இரண்டாவது முறையும் குழந்தையின் பெட்டியில் வெடிகுண்டு இருக்கிறதென்று நினைத்து பயப்படுகிறான்? ஏனெனில், சென்ற முறை ரயிலில் இருந்து குதித்து கோமாவிற்கு போய்விட்டதால் ‘ரயில் வெடித்ததா, இல்லையா’ ‘குழந்தையின் பெட்டியில் என்ன இருந்தது’ என்று தெரியாமலே போய்விட்டது ஆத்ரேயாவிற்கு.

படத்தில் சில விஷயங்கள் ரொம்பவே தற்செயலாக நடப்பதைப் போல் தெரியும், ஆனால் எல்லாவற்றையுமே சரியாக நியாயப்படுத்தியே எழுதியிருக்கிறார் விக்ரம் குமார். உதாரணத்திற்கு, அந்த கடிகார சாவி எப்படி மிகச்சரியாக மணியின் கைகளுக்கு வருகிறது என்கிற கேள்விக்கு, மணியின் ‘பபுள் கம்’ பழக்கத்தின் மூலம் என்கிற பதில் இருக்கிறது. சரி செய்யாத ‘ஷாக்’ அடிக்கும் ஸ்விட்சு என படம் நெடுக ஒவ்வொரு காட்சியிலும் சரியான நியாயங்கள் உண்டு. படத்தில் மூன்று முக்கிய காட்சிகளில் வரும் கழுகினை, காக்கும் கடவுளான விஷ்ணுவின் வாகனம் கருடனாய் பாவித்திருக்கிறார்கள். அதே போல, மணியின் வளர்ப்புத் தாயான சத்யபாமாவை, கிருஷ்ணரின் வளர்ப்புத் தாயான யசோதையுடன் ஒப்பிடலாம். அதே போல, விதி மற்றும் ஊழ் குறித்தும் சில காட்சிகள் உண்டு. தன் வளர்ப்புப்பிள்ளைக்கு ‘மணி’ என பெயரிடுகிறாள் சத்யபாமா, ஆனால் அதே பெயரையே சேது மற்றும் ப்ரியா தம்பதியினரும் தன் பிள்ளைக்கு வைத்திருப்பர்!

ஒரு சிலர் வேறொரு சந்தேகம் கேட்டனர் ‘சேதுராமன் பல நாட்களாக கஷ்டப்பட்டு உருவாக்கும் கடிகாரத்தை, எப்படி ஒரே நாளில் மணியால் மாதம், வருடம் எல்லாம் சேர்த்து மாற்றிவிட முடிகிறது’ என்று. இதே கேள்வியை ஒரு ஹாலிவுட் படத்தில் கேட்டிருப்போமா? ஹாலிவுட் படங்களில் எதைக் காட்டினாலும் கேள்வியே கேட்காமல் நம்பி ரசித்துவிட்டு வரும் நாம், நம் படங்களில் தெரியும் சின்ன சின்ன குறைகளை மட்டும் சுட்டிக்காட்ட தவறுவதில்லை. Fantasy என்கிற ஒரு வார்த்தையில், இந்த கேள்விக்கே இடமில்லாமல் போகிறது. படத்தை மேலும் சுவாரஸ்யமாக்க, இந்த கான்செப்ட்டில் இயக்குனர் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் இவை. அதற்கு அடுத்த காட்சியிலேயே போட்டோவிலே தந்தையின் ஆறு விரலைப் பார்த்து, ஒரு நாள் முன்னதாக சென்று பார்க்கிறான் மணி. ‘அப்படிப் போகும்பொழுது, மணி ஆத்ரேயாவிடம் ஒரிஜினல் கடிகாரத்தைக் கொடுத்து மாட்டிக்கொண்டிருப்பானே?’ என்று சிலர் கேட்டனர். அதற்கு பதில் – ‘இது தனது அப்பா தானா என சந்தேகம் ஏற்பட்டதால், கண்டிப்பாக டுப்ளிகேட் கடிகாரத்தோடு தான் மணி சென்றிருப்பான்’. ‘சரி, தேதி மற்றும் நேரத்தைக் கேட்பதற்காக அவன் ஏன் இரண்டாம் முறையாக திரும்ப சர்ச்சிற்கு வரவேண்டும்? முதல் முறையே கேட்டிருக்கலாமே’ என்றும் சிலர் கேட்கின்றனர். முதல் முறை சர்ச்சிற்கு வந்தபொழுது, சேதுராமானாக  வந்திருப்பது தன் தந்தை தானா என்பது கூட தெரியாமல் இருந்திருப்பான் மணி. அப்பொழுது அவர்கள் உரையாடல் வேறு மாதிரி இருந்திருக்கக்கூடும். ‘நான் தான் உன் அப்பா, அம்மாவை கொன்றேன். பின்னோக்கிப் பயணித்து உன்னையும் கொல்கிறேன் பார்’ என்று ஆத்ரேயா சொல்லும்பொழுது தான், மணி கொஞ்சம் உஷார் ஆகியிருப்பான். அந்த இடத்தில் அவனால் சரியான தேதி மற்றும் நேரத்தை கேட்டிருக்க முடியாது, அதனாலேயே அவன் இரண்டாம் முறை வரவேண்டியிருக்கிறது. இந்த லாஜிக்கை எல்லாம் விளக்கி spoon-feed செய்ய வேண்டிய அவசியமும், நேரமும் இயக்குனருக்கு கிடையாது. இவை எல்லாம் போக, இது ஒரு ஸ்டார் நடிகர் நடித்த கமர்ஷியல் திரைப்படம்; அந்த இடத்தில் கண்டிப்பாக அப்படியொரு மாஸ் சீன் அவசியம் 😉

வேறு சிலர் இந்த படத்தை சமீபத்தில் வெளியான மற்றொரு ‘time travel’ படமான ‘இன்று நேற்று நாளை’யுடன் ஒப்பிடுகிறார்கள்; அப்படிப்பட்ட ஒரு ஒப்பீட்டிற்கு எந்தவொரு அவசியமும் இல்லவே இல்லை. இரண்டுமே நல்ல படங்கள் தான். சின்ன பட்ஜெட்டில் ஒரு சின்ன வட்டத்தில் அருமையாக எடுக்கப்பட்ட படம் ‘இன்று நேற்று நாளை’; அதுவே, எந்த கட்டுப்பாடுமில்லாமல் ‘time travel’ கான்செப்டில் பின்னிப் பெடலெடுத்திருக்கும் படம் ‘24’. வெறும் 5, 6 கோடிகளில் உருவாக்கப்பட்ட ‘இன்று நேற்று நாளை’ போன்ற ஒரு படத்தையும், அதைவிட பத்து மடங்கு பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படத்தையும் ஒப்பிடுவது சரியல்ல. இந்த இரண்டு படங்களையும் ஒப்பிடுவதே மடத்தனம்; இரண்டுமே ஒவ்வொரு வகையில் சிறந்த படம்! ‘24’ சில இடங்களில் தொய்வடைந்தது போல் இருப்பதன் காரணமும் அதுவே, எல்லா தரப்பினருக்கும் புரியும்படி இருப்பதற்காக. இவ்வளவு பொருட்செலவில் எடுக்கப்பட்ட ஒரு ஸ்டார் நடிகரின் படத்தில் கமர்ஷியல் சமரசங்கள் இருக்கத்தான் செய்யும். ஏனெனில் இந்த படம் சென்னை, கோவையில் ஓடினால் மட்டும் போதாது; பொள்ளாச்சி, தஞ்சாவூர், விருதுநகரிலும் ஓட வேண்டும் – அந்த ரசிகர்களுக்கும் புரிய வேண்டும், பிடிக்க வேண்டும். வரிசையாக குப்பைப் படங்களாக எடுத்து 200 கோடி, 300 கோடி என வசூல் சாதனை செய்த நடிகர் ஷாரூக் கான், சமீபத்தில் ஹீரோயின், பாடல்கள் எதுவுமில்லாமல் #FAN என்கிற ஒரு நல்ல படத்தில் நடித்தார்; ஆனால், அது 100 கோடி வசூலைக் கூட தொடவில்லை. இதை நான் ஒரு குறையாக சொல்லவில்லை. அதிக செலவில் ’24’ போல ஒரு நல்ல படமெடுக்கும் ஒரு ஸ்டார் நடிகர், தன் படத்தைக் காப்பாற்ற சின்ன சின்ன சமரசங்கள் செய்வதில் தவறேயில்லை!

சமூக வலைதளங்களில் சில #சூர்யா_haterகள் இந்த படத்தை காரணமே இல்லாமல் கலாய்ப்பதையும் காண முடிகின்றது. எத்தனையோ மொக்கை படங்களை எல்லாம் வெற்றியடைய செய்துவிட்டு, இப்படியொரு படத்தை கலாய்ப்பது அவர்களுக்குத் தான் கேவலம். #காஞ்சனா2, #வேதாளம், #தெறி போல படு சுமாரான படங்களை எல்லாம் 100 கோடி, 120 கோடி வசூல் அல்ல செய்த நாம், ’24’ போன்ற படங்களை உச்சி முகரத்தான் வேண்டும். நிச்சயமாக, ‘24’ போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் பெருமை; வணிக சினிமாக்களை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்வதில் இது போன்ற படங்களுக்கு மிக முக்கிய பங்குள்ளது! இது போன்ற படங்கள் வெளியாவதின் மூலம் ‘ஸ்டார் படங்கள்’ ‘கமர்ஷியல் படங்கள்’ என்கிற tagன் பிம்பம் சற்றே மாறும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது!

எழுதியவர் – ரஹ்மான் (www.fb.com/rahman.machinist)

24 (1).png

Decoding ‘24’ the Movie!

Suriya’s recent release #24 which is being praised by both the critics and majority audience unanimously, is running successfully in the theatres. However, there are a few people who say that ‘I don’t like the film’ or ‘I don’t understand the film’. The intention of this post is to clarify on the same by decoding the nuances in the screenplay.

(People who have watched #24 film alone can read further… Heavy spoilers ahead!)

Director Vikram Kumar who had given extra-ordinary films like 13B, ISHQ and MANAM earlier, is back with another unique entertainer ‘24’ in his signature style. Despite the stretched romance episode and unattractive songs that acts as speed breakers, the whole film is spectacular (Even the love portions are not so deviating, because the scenes move alongside the concept of ‘Time travel’ and ‘Time freeze’).

Provided the ‘Time Travel’ concept, Vikram Kumar has made it so interesting leaving no stone unturned. There was so much of detailing in every other scene. Even though there were few logical lags here and there, the director takes care of making them go unnoticed. For example, consider the villain character in the film; #Aathreyaa’s character only takes forward the film completely. His characterization is sketched so perfectly, that no flaws can be pin-pointed on him; he has been depicted so intelligently till the end. Right from the first scene, Aathreya is such a menacing villain where he kills Sethuraman’s wife ruthlessly to the following scenes where he chops off Mani’s hand to take the watch after killing him, placing the watch in Mani’s hand wrongly to bring him to his house, making Mani to use the watch and being a part of it after he gets caught by Sathyabama in the Cheque book confusion, motivating Mani to make the changes in the watch by fooling him through Mithran and travelling 26 years backward along with Mani.

Director Vikram Kumar’s efforts and brilliance is seen evidently in many scenes. Aathreyaa and Mithran fail so many times in the process of trying to make a new ‘Time Travel’ watch; the director conveys it with no dialogues at all, by just showing the dustbin full of broken watches. In particular, the last 30 minutes has got a lot of interesting shots that are meticulously detailed! Below are few:

– In the church scene, Mani and Aathreyaa who touches the watch, travels backward to the year 1990 with 26 years of memories. In the joy of getting back his legs and becoming a youngster again, Aathreyaa gets out of the car, jumps and dances in excitement. Mithran sees this, but he does not understand anything. Because he did not touch the watch; he does not have any memories.

– Knowing how Sethuraman escaped from his house last time, Aathreyaa sends his men to the backside of the house, asks them to disconnect the power supply, he does not shoot the security this time because he needs someone at the gate. Also, he moves the gas cylinder, once he comes into the house since he saw how it blasted last time.

– If your question is ‘Why is Aathreyaa afraid of the Baby case assuming it has a time bomb, the second time also?’ The answer is that last time he did not know whether the train blasted or not and what was actually in the baby case, since he was in coma.

Few things in the film may look like there are too many coincidences, but all of them are very well justified by the director. For example, the question ‘How does the key of the watch case reach Mani’s hands rightly?’ is answered by the ‘Chewing Gum’ habit of Mani. There are such justifying logic all-through the film including the malfunctioning switch that activates the ‘Time travel’ watch. The Eagle that comes in 3 pivotal scenes is depicted as ‘Garudaa’ [the mount (vahana) of Lord Vishnu]. Likewise, Sathyabama’s character (Mani’s step mother) can be compared to Yashodha (Lord Krishna’s step mother). There are scenes that refer to Destiny / Fate; say the example of Sathyabama naming her step-child as Mani, Sethu and Priya also had named their kid as ‘Mani’!

Few people questioned on the possibility in the pre-climax portion that ‘Sethuraman took so many days to invent such a ‘Time travel’ watch… How can a watch mechanic like Mani add the Month & Year feature to it in a single night?’ Have we asked such logic questions in Hollywood films? We people who watch Hollywood films dropping our jaws despite all logical lags, but we do not fail to question every other minor logic issues when it comes to our own films. These questions become nullified in ‘24’, just by the term ‘FANTASY’. These are cinematic liberties that the director has taken to make this concept even more engrossing. In the next scene, Mani sees 6 fingers in his father’s photo and goes to the future to check what’s wrong. Few people ask ‘Won’t Mani fall prey for Aathreyaa’s tricks, by giving him the original watch with new features?’ The answer is ‘No.’ Because Mani would have went to the next day with a duplicate watch also, since he had a doubt seeing the sixth finger. The next doubt is ‘Why should Mani come again to the Church 2nd time, to ask the date and time? He could have asked it first time itself, right?’ While coming to the Church first time, Mani would have come unprepared not knowing if the one who has come as Sethuraman is his real dad. Their conversation might have been different at that time. Mani would have been alarmed only after Aathreyaa said ‘I am the one who killed your father and mother. See now, I am gonna go back to the past and kill you too’. By then, he could not have asked the right date and time; that is why he had to come again. The director did not have any need or would not have sufficient time to explain all these logic and spoon-feed his audience. Beyond all these, it is a commercial film featuring a star actor; such a mass scene is mandatory here. 😉

Few others are comparing this film with ‘INDRU NETRU NAALAI’, another ‘time travel’ film that released a year ago; there was no need for such a comparison at all. Both are great entertainers in its own way. ‘INDRU NETRU NAALAI’ was a superb film made in a small budget with limited resources within a very small plot; whereas, ‘24’ is a stupendous movie that is unboundedly creative in the concept of ‘time travel’! ‘INDRU NETRU NAALAI’ was made in a shoe-string budget of around 5 to 6 crores, whereas ‘24’ is made in a budget that is 10 times more of it; both the films differ in plot, making, budget and the target audience. It lacks sanity to compare both these films and arguing on which is the best. ‘24’ might look uninteresting or leisurely paced in a few scenes, because it has to be made understandable and enjoyable for all set of audience. It is natural for such a high budget film to have a few ‘Minimum Guarantee’ stuffs and Commercial compromises. Because it is not adequate for the producer if such a film runs in Chennai or Coimbatore alone; it has to run in Pollaachi, Thanjavur and Viruthunagar too – fans from those region also should understand it and enjoy it. Shah Rukh Khan who made crap films grossing 200 crores and 300 crores continuously, made a good film called FAN recently which had no heroine or songs or any mindless commercial stuff; but, unfortunately it did not even cross 100 crores. Am not saying it as a complaint. But, there is nothing wrong for a star actor to include some commercial compromises to save a good film like ‘24’ which is made in a huge budget.

I saw few #Surya_Haters in social sites trolling this film for no reasons. For those people who made many crap films as Blockbusters, it is just a shame to make fun of this film. We people who made average and below average films like #Kaanchanaa2, #Vedalam and #Theri gross 100 crores and 120 crores, should celebrate films like ‘24’. For sure, such films are a pride for us which plays a pivotal role in taking our mainstream cinema to the next level! Such films can help in redefining the name and image of films that are made under the tag of ‘Star Films’ & ‘Commercial Films’!

Written by –  Rahman (www.fb.com/rahman.machinist)

‘FOLLOW’ us at https://boxofficebossblog.wordpress.com to read more movie reviews & interesting cinema articles… Movie buffs, do subscribe..!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s