ஜாக்சன் துரை – விமர்சனம்

246.Jackson Durai – Movie Review.jpg
தமிழ் சினிமாவில் ‘comedy’ படமெடுக்கும் டிரெண்ட் முடிந்தாலும் கூட, இந்த ‘horror comedy’ வகையறா படங்கள் மட்டும் ‘விடாது கருப்பு’ போல! தன்னுடைய முதல் படமான #பர்மா’வில் மேக்கிங்கிலும் ஆங்காங்கே சின்ன சின்ன ஐடியாக்களிலும் ஈர்த்த இயக்குனர் #தரணிதரன், இந்த படத்தில் ஒட்டுமொத்தமாக கோட்டை விட்டிருக்கிறார்!

திரைக்கதையில் சிறிதளவேனும் கவனம் செலுத்தாமல், தியேட்டருக்கு வரும் ரசிகர்களை ஆங்காங்கே சிரிக்க வைத்து, கொஞ்சமே கொஞ்சம் பயமுறுத்தி, முடிவில் ‘பரவால்ல டா, சுமாரா போச்சு’ என சொல்ல வைத்து காசு பார்க்க நினைக்கும் மற்றுமொரு பேய்க் காமெடி படமே ‘ஜாக்சன் துரை’.

படத்தின் முதல் பாதியில் (ஒரு மணி நேரம் முழுக்கவே) கதைக்கு பங்களிக்கும் வகையிலோ, படத்தை நகர்த்தி செல்லும் வகையிலோ ஒரெயொரு காட்சி கூட இல்லை; ‘தேமே’ என நகர்கிறது படம். இடைவேளைக்கு இரண்டு நிமிடம் முன்பு தியேட்டரே அதிர்ந்து சிரிக்கும் வகையில் ஒரு நகைச்சுவை உண்டு, இடைவேளைக்குப் பின் ஓரளவு ரசிக்கும்படியான ஒரு flashbackம் உண்டு. ‘சரி, இதுக்கு மேல படம் நல்லாருக்கும் போல’ என நிமிர்ந்து உட்கார்ந்தால், ‘ஸாரி பாஸ், நீங்க தப்பா feel பண்ணிட்டீங்க’ என்று நம்மை அப்படியே அமுக்கி உட்கார வைக்கிறது இரண்டாம் பாதி.

மொத்த படத்தில் ஒரு 4 சீன்களில் மட்டும் நன்றாக சிரிக்க முடிந்தது, அதற்கும் காரணம் யோகி பாபு, கருணாகரன், ‘மொட்டை’ ராஜேந்திரன் மட்டுமே! நம் கொட்டாவிகளுக்கிடையே, அவர்கள் மட்டுமே இந்த படத்தை கொஞ்சமாவது சுவாரஸ்யம் ஆக்குகிறார்கள். #சத்யராஜ் வீணடிக்கப்பட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும், இவ்வளவு மொக்கையான கதாபாத்திரத்திற்கு சத்யராஜ் அவசியமா என்று எண்ணத் தோன்றியது. படத்தில் பாதி காட்சிகளில் தன் தந்தையும், மீதி காட்சிகளில் ‘இளைய தளபதி’ விஜயையும் imitate செய்ய முயற்சிக்கிறார் #சிபிராஜ்; நடிப்பில் தனக்கென ஒரு தனி ஸ்டைலையும், நல்ல ஸ்கிரிப்ட்களையும் தேர்ந்தெடுக்க ஆரம்பிக்கும் வரை எதுவும் மாறப்போவதில்லை சிபி! பிந்து மாதவி ரொம்பவே அழகாக இருக்கிறார்; ஆனால், படத்தில் அவரது கேரக்டர் செய்யும் அதிகபட்ச வேலை – மைசூர்பாக் பார்சல் பண்ணுவது மட்டுமே. ஒளிப்பதிவு ஆங்காங்கே நன்றாக இருந்தது. சித்தார்த் விபினின் பாடல்களும், பின்னணி இசையும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

ஹீரோயினின் அப்பா சொன்னதால் ஹீரோ பேய் வீட்டில் தங்குகிறார் என்கிற காரணத்தைத் தவிர, இந்த படத்திற்கு ஹீரோயின் தேவையே இல்லை; வெறும் உப்புக்கு சப்பாணி தான். இயக்குனர் #தரணிதரன் நினைத்திருந்தால், திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் இந்த படத்தை ஹீரோயின் இல்லாமல், முதல் பாதியில் பாடல்கள் இல்லாமல், தேவையில்லாத ஜவ்வு இழுவைகள் இல்லாமல், இரண்டாம் பாதியில் ஆரம்பிக்கும் கதையை மட்டுமே வைத்து படு ஜாலியாக ஒரு ‘சூப்பர் எண்டர்டைனர்’ ஆக எடுத்திருக்கலாம். ஆனால், என்ன செய்வது? பாவம், அவருக்கு காசு பார்க்கும் சூட்சுமம் தெரிந்துள்ளது. எப்படியும் இந்த தரத்திலான ஒரு சுமார் படத்தை வைத்தே, போட்ட காசை எடுத்துவிடலாம் என நினைத்திருப்பார் போலும். கொடுமை என்னவென்றால், #அரண்மனை2 போன்ற படு சுமாரான ஹாரர் காமெடி படம் அளவிற்கு கூட இந்த படம் ரசிக்கும்படி இல்லை.

‘சனி, ஞாயிறில் போரடிக்குது… கதைன்னு எதுவும் இல்லாட்டியும் பரவாயில்லை, சும்மா அப்பப்போ சிரிச்சா போதும்’ என்று நினைக்கும் ஒருவராக நீங்கள் இருந்தால், இந்த படம் நிச்சயமாக உங்களை ஏமாற்றாது! #கபாலி வெளியாகும் வரை, சந்தானம் படத்தைத் தவிர (அதுவும் பேய் படம்’தானுங்கோ!!) அடுத்த இரண்டு, மூன்று வாரங்களுக்கு வேறு பெரிய படம் இல்லை என்பதால், ‘ஜாக்சன் துரை’ சுமாரான வெற்றியைப் பெறும் என தோன்றுகிறது.

ரேட்டிங் – 2.25/5

விமர்சனம் எழுதியவர் – கலிலூர் ரஹ்மான்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s