Aalavandhan – The Cult Classic!

[Look for the English write-up below]

எம் தலைவன் #உலகநாயகன் #கமலஹாசன் நடிப்பில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களுள் ஒன்றும், தமிழ் சினிமா கொண்டாடத் தவறிய கமர்ஷியல் சினிமாக்களில் ஒன்றுமானது #ஆளவந்தான். 2001ஆம் ஆண்டில் வெளியான சமயத்தில், தமிழ் ரசிகர்களுக்கு பெரிதாக பிடிக்கவில்லை (அல்லது முழுதாக புரியவில்லை). கமல் அவர்களின் திரைப்படங்களில் மிகவும் underrated படமான ‘ஆளவந்தான்’ (‘குணா’விற்கு அடுத்தபடியாக என்றும் கூட சொல்லலாம்) தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்பொழுது, இன்றும் கூட கமல் ரசிகர்கள் அல்லாத பலர் ‘இவ்ளோ நல்லாருக்கே, இந்த படம் ஏன் ஓடல?’ என கேட்பதுண்டு! உலகமே கொண்டாடும் Quentin Tarantino என்கிற ஹாலிவுட் இயக்குனர் இயக்கத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட ‘Kill Bill’ படத்தில் வரும் ஒரு அனிமேஷனுக்கான ஐடியா ‘ஆளவந்தான்’ படத்தைப் பார்த்து inspire ஆனது என்பது பலருக்கு தெரிந்தவொரு விஷயம். வேறு பல கமல் படங்களைப் போல, திரைமொழியிலும், தொழில்நுட்ப அம்சங்களிலும் ரொம்பவே அட்வான்ஸாக இருந்தது மட்டுமே ‘ஆளவந்தான்’ தோல்வியடைந்ததற்கும், மக்களால் வரவேற்கப்படாமல் போனதற்குமான ஒரே காரணம்.

நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபொழுது இந்த படத்தை பார்த்தது, மறக்கவே முடியாத அணுபவம். ‘ஆளவந்தான்’ வசூல் ரீதியாக தோல்விப்படம் தான் என்றாலும், வரலாறு காணாத ஓபனிங் இருந்தது. அது வரை, ஒரு சில ரஜினி படங்கள் தவிர வேறு எந்த படத்திற்கும் நான் அப்படியொரு கூட்டத்தையோ, ஆரவாரத்தையோ கண்டதில்லை. ரஜினி ரசிகர்களே கூட பெரிதும் எதிர்பார்த்த படம் அது. 2001ஆம் ஆண்டு தீபாவளி அன்று தொடங்கி, 4, 5 நாட்களாக டிக்கெட்டே கிடைக்காமல் ஒவ்வொரு நாளும் தியேட்டருக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி, ‘இந்த படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும்’ என்று ஒவ்வொரு நாளும் படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடி, கடைசியாக ஒரு சனிக்கிழமை இரவில் நான், அண்ணன், தங்கை, அப்பா அனைவரும் இந்த படத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்ததையும், படம் முழுக்க ஆச்சர்யமாக வியப்பாக நான் அணு அணுவாக ரசித்ததையும், படம் முடிந்து கொட்டும் மழையில் படத்தைப் பற்றி பேசிக்கொண்டே போனதையும், இரவு முழுக்க நந்தகுமாரன் பற்றிய சிந்தனையுமாக இருந்துவிட்டு உறங்கியதையும், அடுத்த நாள் காலையில் ‘கமல்ஹாசன் என்கிற பெரும்கலைஞனின் ரசிகன்’ ஆக நான் மாறி இருந்ததையும் இன்றளவிலும் நினைவு கூற முடிகிறது.

இன்று வரை, யாராவது இப்படத்தைப் பற்றி பாராட்டிப் பேசினாலோ, ஏதோ ஒரு குறை கூறினாலோ, அல்லது ஏதேனும் சந்தேகங்கள் கேட்டாலோ… இப்படம் குறித்த ஒரு நீண்ட, ஆனந்த விவாதத்தில் மூழ்கிவிடுவேன். இந்த படத்தின் அருமை இப்போதாவது பலருக்குப் புரிகிறதே என ஒரு ரசிகனாக உள்ளூர பெருமிதமும் கொள்வேன். அந்தளவிற்கு எனக்கு ‘ஆளவந்தான்’ பிடிக்கும். கமலின் best படம் என வேறு எந்த படம் வேண்டுமானாலும் இருக்கலாம், ஏனோ எனக்கு most favourite திரைப்படம் இதுவே.

உலக நாயகன் _/\_

Aalavandhan.jpg

‘Ulaga Nayagan’ Kamalhaasan’s #Aalavandhan is one of the best ever films made in Tamil cinema and a great commercial film that our industry failed to celebrate. At the time of its release in 2001, Tamil cinema audience did not like it much (or they found it too complex to enjoy, to be in precise). ‘Aalavandhan’ is the most under-rated film of Kamalhaasan (next to ‘Gunaa’); even today when it is being telecasted in TV channels, many people other than Kamal fans also wonder ‘what an extra-ordinary film it is, why did it flop in the box office?’ Even the most notable Hollywood filmmaker QUENTIN TARANTINO has mentioned that the idea for the animation sequence in his film ‘KILL BILL’ was inspired from Kamal’s ‘Aalavandhan’. Similar to several other good films of Kamal that bombed at the box office, the brilliant screenplay and narration in ‘Aalavandhan’ which was much ahead of its time, had acted against the film’s commercial viability.

I can still cherish the memories of watching this film in theatre, when I was in my 8th grade. Though ‘Aalavandhan’ was a flop commercially, the film had a humungous opening. I have never seen such a crowd or cheering for any other film, than a few Rajini movies; it was a film that was much expected by Rajini fans too. I can never forget those days when we were not able to get tickets in the first 4, 5 days from 2001 Diwali and returned home sadly, the mania that increased over the film every day in me that ‘I should watch this film somehow’. Finally, I watched this film in ‘black ticket’ on a Saturday night with my dad, brother and sister. That is a treasured experience of enjoying the film with so much of admiration scene by scene, returning home discussing about the film in heavy rain, thinking about Nandhakumaran’s character all night and waking up next morning as a fan of ‘Ulaga Nayagan’!

Till date, if anyone praises this film, or talks about the flaws in it, or asks any doubt from it… I fondly get lost into a long, detailed discussion about this film. I used to feel happy and proud as a Kamal fan that people are enjoying and understanding its value at-least now. Kamal’s BEST FILM might be anything, but this has been my MOST FAVOURITE FILM of Kamal without a second thought th September, 2016) at FANTASTIC FEST (a prestigious film festival that happens in America) and that the film was highly appreciated by many audience as it was one of the finest entertainers that they had watched in recent years, I could not stop myself from writing few words about this cult classic! ❤

Ulaga Nayagan _/\_

– Rahman (www.fb.com/rahman.machinist)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s