திரு.சிவகார்த்திகேயன் அவர்களுக்கு…

ஒரு ஷாப்பிங் மாலிலோ, டிராபிக் சிக்னலிலோ ஒரு அழகான பெண்ணைப் பார்த்ததும் ‘காதல்’ வந்துவிடும்… ஏதேதோ செய்து அவளை காதலில் வீழ்த்த முயற்சித்து, ஏதும் பலனளிக்கவில்லை எனில் ‘அவ எனக்கு அல்வா குடுத்துட்டா…’ ‘பொண்ணுங்க எல்லாம் பசங்களை அழ வைக்குறாளுங்க… அதுதானே அவளுங்களுக்கு full-time வேலை’ ‘பொண்ணுங்க எங்களை ஏமாத்துறாங்க’ன்னு வார்த்தைக்கு வார்த்தை சீனுக்கு சீன் பொண்ணுங்களைத் திட்டி, அவங்களைப் பத்தி மொக்கையான ஜோக் அடிக்கணும்… அப்புறம், சம்பந்தமே இல்லாம சரக்கடிச்சுட்டு ஒரு மொக்க பாட்டு ஒண்ணு பாடணும்… சினிமா விதிப்படி, கிளைமாக்ஸ்’ல ஒண்ணு சேரணும்..

இதுதான் இப்போதைக்கு இருக்குற ‘Romantic Comedy’ படங்களோட பார்முலா…

தியேட்டருக்கு வர்ற ஆடியன்ஸ்’ல முக்கால்வாசி பேர் 15-25 வயசுக்குள்ள இருக்குற பசங்க. கஷ்டமே படாம, ஸ்கிரிப்ட்’க்காக பெருசா மெனக்கெடாம அந்த ரசிகர்களை கைத் தட்ட வைக்க, சிரிக்க வைக்க ரொம்ப ஈசியான வழி பொண்ணுங்களை வெச்சு ஜோக்கடிக்குறதும், டாஸ்மாக் சாங் வெக்குறதும்தான்.. இதெல்லாம் வெச்சுட்டு வழக்கமான ‘லவ் ஸ்டோரி’ ஒண்ணை எத்தனை தடவை எடுத்தாலும், நம்ம மக்கள் பார்ப்பாங்க :/ இந்த மாதிரி கதையில நடிக்குற ஹீரோக்கள் யாரா இருப்பாங்கன்னு பார்த்தீங்கன்னா, வளர்ந்து வரும் ஹீரோக்களா இருப்பாங்க… அதாவது, எப்படியாச்சும் படத்தை ஓட்டி தனக்குன்னு ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்க துடிக்குறவங்க (உதாரணம் – ஜி.வி.பிரகாஷ் மாதிரி)… ஆனா, ஏற்கனவே ரொம்ப பெரிய ஓப்பனிங் மற்றும் ரசிகர் கூட்டம் இருக்குற #சிவகார்த்திகேயன் எதுக்கு இப்படி ஒரு கதையில நடிக்கணும்ன்னு தெரியல?!

சிவாவுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் – உங்க படங்களுக்கு குழந்தைகளும், இளைஞர்களும் தான் அதிகளவில் வர்றாங்கன்னு ஞாபகம் வெச்சுக்கோங்க, சிவா… உங்களுக்கு கிடைச்சிருக்குற இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம், மிகப்பெரிய வரம். நீங்க #மான்_கராத்தே மாதிரி மொக்க படம் நடிச்சாலும், சூப்பர் ஹிட் ஆகுதுங்கிறதுக்காக அதே மாதிரி படங்கள் நடிப்பது சரியான்னு மட்டும் யோசிங்க. இந்த படங்கள்ல வர்ற ஹீரோ மாதிரி வேலைக்கே போகாதவன், ஹீரோயின் பின்னாடி மட்டுமே சுத்துறவன் எல்லாம் நிஜத்துல 10% கூட கிடையாது. பொத்தாம்பொதுவா, இளைஞர்கள் எல்லாரும் இப்படித்தான்னு சொல்றளவுக்கு எல்லா படத்துலயும் இதே போல தயவு செய்து நடிக்காதீங்க… அது, பெரும்பாலான இளைஞர்கள் மீதான செருப்படி!
உங்கள் மீதும், உங்கள் திறமை மீதும், உங்கள் வளர்ச்சி மீதும் மரியாதை கொண்டவர்கள் நிறைய பேர் இங்கே இருக்கிறோம். ரஜினி, கமல், விஜய், அஜீத் என்கிற 4 பெரிய ஸ்டார்களுக்கு அடுத்தபடியாக உங்கள் படம் வெளியானால் முந்திக்கொண்டு படம் பார்க்கும் இளைஞர்களும், குடும்பங்களும் இங்கே இருக்கிறார்கள். நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கும் மிகப்பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது (கதையே இல்லாமல் கம்பு சுத்தும் இன்னொரு #ரெமோ’வோ #மான்கராத்தே’வோ வேண்டவே வேண்டாம்!) இயக்குனர்கள் மோகன் ராஜா, பொன் ராம், ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் ஆகியோருடன் நீங்கள் இணையும் உங்கள் அடுத்தடுத்த படங்கள் அப்படி இருக்காது என நம்புகிறோம்.

– ரஹ்மான் (http://www.fb.com/rahman.machinist)    

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s