ஒரு கிடாயின் கருணை மனு – திரைப்பட விமர்சனம்

4b14aa4e-0301-4e10-a2f1-7bf9d387ef07
புதிதாக கல்யாணம் ஆன விதார்த் மற்றும் ரவீணா, தங்கள் கிராமமான ‘நடுவப்பட்டி’ மக்களோடு சேர்ந்து குலதெய்வ கோவிலுக்கு கிடா வெட்ட போய்க் கொண்டிருக்கிறார்கள். போகிற வழியில் எதிர்பாராத விதமாக ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுவிடுகிறது. நடுவப்பட்டி மக்களும், விதார்த்தும் அடுத்து என்ன செய்கிறார்கள்? போலீஸை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் கதை.

கிடாவெட்டு, குழந்தைக்கு மொட்டை அடித்தல், காது குத்துவது என வீட்டின் ஒவ்வொரு சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஊரையே அழைத்து குலதெய்வத்தை வணங்கி கறி சோறு ஆக்கி உண்ணும் நம் மக்களின் பழக்க வழக்கங்களை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் இயக்குனர் சுரேஷ் சங்கையா.

படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவ்வளவு நிஜமாக இருக்கிறார்கள். 35 வயதில் கல்யாணம் ஆகியும் மனைவியை நெருங்க முடியாத விதார்த், எப்பொழுதுமே அக்கறையோடு திட்டிக்கொண்டே இருக்கும் விதார்த்தின் பாட்டி, புலம்பிக்கொண்டே இருக்கும் மாமனார், விதார்த் கையில் கவர் மாட்ட சொல்லும் அவர் மனைவியைப் பார்த்து தானும் கவர் மாட்டும் நண்பர்கள், ஆட்டுத்தோலுக்கும் முன்னங்காலுக்கும் ஆசைப்பட்டு வரும் கறிக்கடைக்காரர், எங்கு விருந்து என்றாலும் உடனே முதல் ஆளாக கிளம்பிவிடும் பைரவன்-வைரவன் பிரதர்ஸ், ‘ஏம்ப்பா, என்னைய ஒரு வார்த்தை கேட்டுட்டு கரண்டியை எடுக்கலாம்ல?’ என பரிதாபமாக பேசியே சிரிப்பை வரவழைக்கும் சமையல்கார ‘சித்தன்’, கிராமத்தினரிடையே எக்குத்தப்பாக மாட்டிக்கொள்ளும் லாரி டிரைவர், முதலில் ஆவேசமாக பேசி பின்னர் மொத்தமாக சரண்டர் ஆகும் லாரி ஓனர், தொட்டதற்கெல்லாம் ‘அரும்பாடுபட்டு’ என ஆரம்பிக்கும் ஊர்க்காரர், கிடைத்த சந்தர்பத்தை தனக்கு சாதகமாய் உபயோகிக்கும் வக்கீல் மாமா, கடைசி காட்சியில் ‘ஒரு வாய் சாப்பிட்டுட்டு போகலாம்லப்பா’ என கேட்கும் அந்த பாட்டி என படம் நெடுக வரும் கதாபாத்திரங்கள் தான் மொத்த படத்தையுமே தாங்கிப் பிடிக்கின்றன.

இத்தனை எளிமையான ஒரு கிராமிய படத்தைப் பார்த்து எத்தனை நாளாயிற்று? கடந்த 10 ஆண்டுகளில் வெளியான படங்களில் ஒரு சின்ன கிராமம், அந்த மண் சார்ந்த கதாபாத்திரங்கள், அந்த பாத்திரங்களுக்கே உண்டான சுவாரஸ்யம் என மிக அருமையாக நெய்யப்பட்ட ‘வாகை சூட வா’, ‘பூ’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘களவாணி’ ‘அழகர்சாமியின் குதிரை’ படங்களின் வரிசையில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தையும் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளலாம்.

மிக எளிமையான வசனங்களினால் ஈர்க்கிறார் இயக்குனர். படத்தின் முதல் காட்சியில் தன் கல்யாணத்திற்கு வந்த பரிசுப் பொருட்களில் பெரும்பாலும் கடிகாரங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு ‘சுவத்துக்கு நாலுன்னு மாட்டினாலும், கதவுக்கு மூணு மிஞ்சும் போலயே’ என்பதில் ஆரம்பித்து, ‘கிடாவுக்கு வேப்பிலை தின்னக் கொடுத்து, கறியைக் கசக்க வைக்கவா கெழவி இவ்வளவு கஷ்டப்பட்டுச்சு?’ என படம் முழுக்க ரொம்பவே யதார்த்தமான வசனங்கள் நிரம்பி வழிகிறது. இசையும், ஒளிப்பதிவும் கதையின் போக்கிலேயே அழகாய் துணை நிற்கின்றன. இந்த படத்தின் மிகப்பெரும் பலமே, இந்த படத்தின் எளிமை தான். இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வு, குறைகள், சில இடங்களில் சுவாரஸ்யமின்மை என எல்லாவற்றையும் தாண்டி ஒரு சிறந்த படமாக்குவது அதுவே! (y) (y)

ரஹ்மான்

‘FOLLOW’ us at https://boxofficebossblog.wordpress.com to read more movie reviews & interesting cinema articles… Movie buffs, do subscribe…!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s